செய்திகள்

மூணார், காண கண் கோடி வேண்டும் !

கேரளாவில் உள்ள மூணார், தென்னிந்தியாவில் உள்ள சொர்க்கம் என்றே சொல்லலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் இங்கு செல்வது பொருத்தமாக இருக்கும். மழைக் காலங்களின் போது, பெரியளவில் கொண்டாட்டமாக இருக்காது. ஆனால் கோடைக் காலத்தில் அனைவரையும் அரவணைத்து வரவேற்கும் மூணார்.

மூணாரில் உள்ள எரவாய்குளம் தேசிய பூங்கா அனைவரும் பார்க்க வேண்டிய பகுதி. இங்கு நமது மாநிலத்தின் விலங்கான வரையாடு அதிகளவில் காணப்படுகிறது. தாவர உண்ணிகளால் மலையேறும் திறமை பெற்றது வரையாடு.

1940-களில் கட்டப்பட்ட மட்டுப்பட்டி அணை, மூணாரின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஹைட்ரோ எலெக்ட்ரிசிட்டி மின்சாரம் தயாரிப்பதற்காக இது கட்டப்பட்டது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மோட்டார் படகு, மிதி படகு பயணங்கள் இங்கே இருக்கின்றன. படகில் போகும் போதே இந்த பகுதியின் எழில் கொஞ்சும் இயற்கையை காண கண் கோடி வேண்டும்.

இங்கு தான் நீலக்குறிஞ்சி மலர்கள் எப்போதும் அதிகளவில் பூத்துக் குலுங்கும். அதை தேடி வண்டு, பூச்சி இனங்கள் அதிகளவில் வரும். அப்போது அவை எழுப்பும் ஒலியை கேட்கும் போது, அந்த சூழலே மிகவும் ரம்மியாக இருக்கும்.

இப்பகுதியில் இருக்கும் பசுமையான சூழல் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகள் மிகவும் பிரபலமானவை. சுற்றுலாத்துறையின் நடவடிக்கைகளால், இப்பகுதி நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை வந்திறங்கும் பகுதி என்பதால், இந்த இடம் யானை இறங்கல் என்று பெயர் பெற்றது.

மூணாரில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சாலைகளுக்கு நடுவே உள்ள தேயிலை தோட்டங்கள், பச்சை கம்பளம் விரித்தது போல இருக்கும். அதை பார்த்து கொண்டே நின்றால் நேரம் போவதே தெரியாது.

சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக மூணார் உள்ளது. இங்கு மட்டும் உள்நாட்டைச் சேர்ந்த 250 பறவை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவற்றில் அழிந்து வரும் பறவை இனங்களும் அடக்கம். இப்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள், மலைப்பகுதியில் பைக்கிங்கும் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *