வாழ்வியல்

முத்ரா கடனுதவி திட்டம்; வங்கிகள் பட்டியல் விவரம்!

Spread the love

முத்ரா திட்டத்தில், இந்திய அரசு பல வகைக் கடன்களை வழங்கி வருகிறது. முத்ரா என்றால் வங்கி அல்ல. இது கடன் திட்டம். முற்றிலும் குறுந்தொழில்களுக்கான திட்டம்.

1) சிசு -– இத்திட்டத்தில் ரூ.50,000- வரை கடன் பெறலாம்.

2) கிஷோர் –- ரூ.50,000- முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.

3) தருண் – – ரூ.5 இதில் லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

18 க்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பண்ணை, ஆடு மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு கடன் இல்லை. 12% வட்டி செலுத்த வேண்டும். 5 ஆண்டில் திரும்ப கட்ட வேண்டும்.

இத்திட்டத்தில் கடன் வழங்க…

ஸ்டேட் வங்கி, பிகானிர் & ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா / கார்ப்பரேஷன் / தேனா / IDBI / இந்தியன் / பஞ்சாப் நேஷனல் / சிண்டிகேட் / யூகோ / விஜயா / அலகாபாத், ஆந்திரா சென்ட்ரல் / பஞ்சாப் & சிந்து வங்கிகள், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், ஐதராபாத் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட், பாட்டியாலா ஸ்டேட் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய அரசு வங்கிகளும், 18 பெரிய தனியார் (Sheduled) வங்கிகளும் பணிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி, பல்லவன் கிராம பேங்க், பாண்டியன் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கிகள், மதுரா மைக்ரோ பைனான்ஸ், எக்வட்டாஸ் மைக்ரோ பைனான்ஸ், பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் & பைனான்ஸ், ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ், ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ், வரம் கேப்பிட்டல், MSM பைனான்ஸ், மகாசேமம், பைனான்ஸ், பிளாஸ் டிரஸ்ட், ரிலையன்ஸ் கேப்பிடல், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், சக்தி பைனான்ஸ் இண்டியாபுல் பைனான்ஸ், நபார்டு பைனான்ஸ் சர்வீஸ். ஆகியவை கடன் வழங்க இந்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *