செய்திகள்

ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, அக்.12

மறைந்த பாரதீய ஜனதா தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே 1919ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ந்தேதி பிறந்தார். 2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ந்தேதி மறைந்தார். இன்று விஜயராஜே பிறந்த தினத்தை முன்னிட்டு ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *