செய்திகள்

பெண்கள், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்: ஜெயலலிதாவுக்கு மோடி புகழாரம்

டெல்லி, பிப். 24–

பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர் ஜெயலலிதா என, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று ஜெயலலிதாவின் 73’வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி, நினைவு கூர்ந்து டுவிட்டர் மூலம் நினைவு கூர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறி உள்ளதாவது;–

“ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகளையும் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றால் மக்களால் பரவலாகப் போற்றப்படுகிறார்.

மேலும் நம் பெண்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான, குறிப்பிடத்தக்க முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அவருடனான எனது பல சந்திப்புகளை, நான் எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன்.

என, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *