செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: பிரதமர் மோடியின் படம் நீக்கம்

டெல்லி, மார்ச் 6–

தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் படத்தை நீக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும், பிரதமர் மோடியின் புகைப்படம் அரசு சார்ந்த திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். குறிப்பாக, பெட்ரோல் பங்குகளில் மோடி படம் இடம் பெற்றிருப்பதை நீக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

அதேபோல், கொரோனா தடுப்பூசி சான்றிதழில், மோடிப் படம் இடம் பெறுவது விதிமுறைகளுக்கு முரணானது என்று, கேரளாவைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தது.

மோடி படம் நீக்கம்

இதன் காரணமாக, கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்க, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையமும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறையினர், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கும் சான்றிதழில் தேர்தல் முடியும்வரை பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கும் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *