செய்திகள்

குலாம் நபி ஆசாத் மிகச் சிறந்த மனிதர்: மாநிலங்களவை எம்.பி. பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி, பிப். 9–

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடியவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார். குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இதையாட்டி அவர்களுக்கு பிரியாவிடை நடைபெற்றது. இதையொட்டி பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை. சிறந்த அரசியல்வாதி. தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காக பெரும் தொண்டாற்றி வருபவர்.

குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கியிருந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் ஆகியோரை நான் தொடர்பு கொண்டேன்.

அப்போது அந்த அளவுக்கு இருவரும் உதவி செய்தனர். குலாம் நபி ஆசாத் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்தார். நான் என்றும் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக முக்கிய ஆலோசனைகளை பலமுறை குலாம் நபி ஆசாத் எனக்கு கூறி உள்ளார்.

குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. இவர் அவையை விட்டு போனாலும் அவரது அறிவுரைகள், கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். மேலும் “ஆசாத் சல்யூட்” என நெற்றியில் கை வைத்து சல்யூட் அடித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் 2015-ம் ஆண்டு ஜம்மு–காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது பதவி காலம் நிறைவடைகிறது.

ஜம்மு–காஷ்மீர் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் குலாம் நபி ஆசாத் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *