செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 450 பேருக்கு வீடுகட்டும் பணி ஆணை: அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம்,பிப்.22-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி ஆணைகளை கலெக்டர் பொன்னையா தலைமையில், அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி ஆணைகளை கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் ப.பெஞ்சமின் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பிறகு அவர் பேசியதாவது:–

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டு கட்டும் திட்டம் மத்திய மற்றும் தமிழக அரசின் பங்களிப்போடு வீடு கட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2.10 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்த மானியத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக வீடு ஒன்றிற்கு 1.50 லட்சம் ரூபாய் தமிழக அரசின் பங்களிப்பாக வீடு ஒன்றிற்கு 0.60 லட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மானியமானது நான்கு நிலைகளாக, அதாவது அடித்தளம் அமைத்தவுடன் ரூ.50,000, நிலை மட்டம் அமைத்தவுடன் ரூ.50,000, தளம் அமைத்தவுடன் ரூ.50 ஆயிரம் மற்றும் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் ரூ.60 ஆயிரம் என பயனாளிகளின் வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று மானியமாக வழங்க மத்திய மற்றும் தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 900 குடியிருப்புகள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 1746 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அரசால் இதுவரை பயனாளிகளுக்கு மானியமாக 41 கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது எனவும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் காஞ்சீபுரம் தாலுக்கா – 2803, ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா – 2460, வாலாஜாபாத் தாலுக்கா – 747, உத்திரமேரூர் தாலுக்கா – 1045 என மொத்தம் 7055 குடியிருப்புகள் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உத்திரமேரூர் தாலுக்காவில் 100 குடியிருப்புகளும் வாலாஜாபாத் தாலுக்காவில் 350 குடியிருப்புகளும் கட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனிநபர் வீடு கட்டுவதற்காக தனிநபர் வீட்டுக்கடன் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழக்கை பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, காஞ்சீபுரம் வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அய்யப்பன்தாங்கல் ஏ.என்.ஈ.பூபதி, அண்ணா திமுக நிர்வாகிகள் அத்திவாக்கம் செ.ரமேஷ், போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், தென்னேரி என்.எம்.வரதராஜூலு, வடகால் ஆர்.சவரிங்கம், ஒன்றிய செயலாளர்கள் களியாம்பூண்டி தங்கபஞ்சாட்சரம், கே.ஆர்.தருமன், தும்பவனம் டி.ஜீவானந்தம், சுங்குவார்சத்திரம் கணேசன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *