செய்திகள்

திருப்பத்தூரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி: அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் ஆய்வு

திருப்பத்தூர், பிப். 9–

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டங்கள் கட்டடப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைத்திட முதலமைச்சர் 30.09.2020 அடிக்கல் நாட்டினார். தரைத்தளம் 3454 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 3820 சதுர மீட்டர் பரப்பளவிலும், இரண்டாம் தளம் 3548 சதுர மீட்டர் பரப்பளவிலும், மூன்றாம் தளம் 3327 சதுர மீட்டர் பரப்பளவிலும், நான்காம் தளம் 3327 சதுர மீட்டர் பரப்பளவிலும், ஐந்தாம் தளம் 3726 சதுர மீட்டர் பரப்பளவிலும், ஆறாம் தளம் 3548 சதுர மீட்டர் பரப்பளவிலும், ஏழாம் தளம் 2626 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 27,376 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடங்களில் அனைத்துத்துறை அலுவலகங்கள் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டரங்கு 1, சின்னக்கூட்டரங்குகள் 3, கலந்தாய்வு கூட்டரங்குள் 3, ஏடிஎம் அறை 1 ஒவ்வொரு தளத்திலும் ஆண்கள் கழிவறைகள், பெண்கள் கழிவறைகள் கட்டப்பட்டுவருகிறது.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிய கட்டங்கள் கட்டடப்பட்டுவரும் பணிகளை கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பிரதான சாலையில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியினையும், கூடுதல் வழி அமையயுள்ள இடத்தினையும் பார்வையிட்டார். இக்கட்டடங்கள் கட்டும் பணிகளை ஒப்பந்ததாரிடம் மிகவிரைவாகவும் நல்ல தரமாகவும் கட்டித்தர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி பொறியாளர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், கட்டடிட கட்டும் நிறுவன பொது மேலாளர் சிவக்குமார், செந்தூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *