செய்திகள்

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

Spread the love

திருவண்ணாமலை, ஜன. 16–

திருவண்ணாமலை மாவட்டம் முள்ளன்ரம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், முள்ளன்ரம் ஊராட்சி மற்றும் செய்யாறு ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ‘‘அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்’’ துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் க.சு.கந்தசாமி, செய்யரர் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் எல். நான்சி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம், முள்ளன்றம் ஊராட்சியிலும், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சியிலும், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், தென்பள்ளிப்பட்டு ஊராட்சியிலும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியிலும் துவக்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.69 கோடி மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம், 32 மீட்டர் உயர்கோபுர மின்விளக்கு பணிகள் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. செய்யாரில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது செய்யரர் சிறு விளையாட்டு அரங்கத்தில் ரூ.46.13 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் மற்றும் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளத்துடன் கூடிய கூடைப்பந்து மைதானம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜவ்வாது மலையில் புதியதாக சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் மாணவர்களுக்குகான விளையாட்டு விடுதியும், செய்யாறு வட்டத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை பெண்கள் விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை புரிந்து வருகிறார்கள். தேசிய அளவிலான தெற்கு மண்டல தடகளம் போட்டிகளில் 2018-2019 ஆம் ஆண்டு ஒரு தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம், 2019-2020 ஆம் ஆண்டு 2 வௌ்ளிப் பதக்கம் பெற்று நமது விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை புரிந்துள்ளார்கள். மேலும், மாநில அளவிலான தடகளம் போட்டிகளில் 2017-2018 ஆம் ஆண்டு 2 தங்கம், 3 வௌ்ளி, 1 வெண்கலம், 2018-2019 ஆம் ஆண்டு 7 தங்கம், 8 வௌ்ளி, 9 வெண்கலம், 2019-2020 ஆம் ஆண்டு 13 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் பெற்றுள்ளார்கள்.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் தமிழ்நாடு அணியில் 2017-2018 ஆம் ஆண்டு திருவண்ணாமலை பெண்கள் விளையாட்டு விடுதி மாணவி ஒருவர் பங்கேற்று தங்கப் பதக்கம், 2018-2019 ஆம் ஆண்டு மூன்று மாணவிகள் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்கள். மேலும், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் 2017-2018 ஆம் ஆண்டு 12 பெண்கள் வெண்கலம் பதக்கம், 2018-2019 ஆம் ஆண்டு 36 பெண்கள் தங்கப் பதக்கம், 2019-2020 ஆம் ஆண்டு 36 பெண்கள் தங்கப் பதக்கம், 24 பெண்கள் வௌ்ளிப் பதக்கம், 36 பெண்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்கள். திருவண்ணாமலை பெண்கள் விளையாட்டு விடுதி மாணவிகள் கைப்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளிலும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை பெற்று நமது மாவட்டத்திற்கு சிறப்பு சோ்த்து வருகிறார்கள். மாண்புமிகு அம்மாவின் அரசு மாணவர்களின் விளையாட்டு திறனை வௌிக்கொண்டு வருவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை, உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆரணி ஊராட்சி ஒன்றியம், முள்ளன்ரம் ஊராட்சியில் கைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் மற்றும் செய்யரர் ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சியில் கைப்பந்து, புப்பந்து, கபடி ஆகிய போட்டிகளை துவக்கி வைத்தார். மேலும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *