செய்திகள்

கடலூரில் புதிய நவீன பேருந்து நிலையத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணி

கடலூர், ஜன. 24

கடலூர் மாவட்டம் புதிய நவீன பேருந்து நிலையத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பழைய பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் கடலூர் பெரு நகராட்சிக்குட்பட்ட வில்லவராயநத்தம் பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு உரிய இடத்தில் 18.58 ஏக்கர் இடத்தை 266.2020 அன்று நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய நவீன பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் எல்லைகளுக்கு சுற்றுவேலி அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கடலூர் வட்டாட்சியர் பலராமன், கடலூர் நகராட்சி ஆணையர் இராமமூர்த்தி, நகராட்சி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகராட்சி இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *