செய்திகள்

வளவனூர் குறைதீர்வு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்

Spread the love

விழுப்புரம், நவ.20-

வளவனூரில் நடந்த முதலமைச்சரின் குறைதீர்வு முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளவனூர் பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன், வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாத்துரை, தாசில்தார் கணே‌‌ஷ், குடிமைப் பொருள் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வளவனூர் பகுதியை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த முகாமில் ஆவின் தலைவர் பேட்டை முருகன், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகவேல், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரே‌‌ஷ் பாபு, வளவனூர் கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத் தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *