செய்திகள்

செங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்

செங்கல்பட்டு, செப் 25–

செங்கல்பட்டு மாவட்டம், திருமணி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 65 நகரும் நியாய விலைக்கடைகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் பா.பென்ஜமின் கூறுகையில் இம்மாவட்டத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் 9 நியாய விலைக் கடைகளும், திருப்போரூர் தொகுதியில் 26 கடைகளும், மதுராந்தகம் தொகுதியில் 19 கடைகளும், செய்யூர் தொகுதியில் 11 கடைகள் என 65 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. கே.மரகதம்குமரவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வி.வேலாயுதம், ஒன்றிய கழக செயலாளர்கள் விவேகானந்தன், சிங்கபெருமாள் கோவில் எஸ்.கவுஸ்பாஷா, கஜா என்கிற கஜேந்திரன், மாமல்லபுரம் ஜி.ராகவன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், அண்ணா தி.மு.க. நிர்வாகியும், செய்யூர் வக்கீலுமான சி.ஜெயசந்திரன், பல்லாவரம் கே.ஜி.இளங்கோவன், கூட்டுறவு வங்கி தலைவர் சல்குரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *