செய்திகள்

எம்.ஜி.ஆர் 104வது பிறந்த நாள்: தமிழகம் முழுவதும் 17–ந் தேதி முதல் 3 நாட்கள் பொதுக் கூட்டங்கள்

எடப்பாடி பழனிசாமி – 17– தேதி தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம்

ஓ. பன்னீர்செல்வம் – 19–ந் தேதி சென்னை புறநகர் மாவட்டம்

சென்னை, ஜன.13–

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி 17 –ந் தேதி முதல் 19–ந் தேதி வரை 3 நாட்கள் அண்ணா தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2021 முதல் 19.1.2021 வரை மூன்று நாட்கள், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

யார்–யார்?

எந்தெந்த இடங்களில் யார்– யார் பேசுகிறார்கள் என்ற பட்டியலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒப்புதலோடு அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *