சென்னை, ஜன.11
ஏற்கனவே அறிமுகம் செய்து வரவேற்பை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ் சொகுசு கார், தற்போது மேம்படுத்தப்பட்டு கூடுதல் சொகுசு வசதிகளுடன் இன்டர்நெட் வசதி, ஆங்கிலம் – இந்தி மொழியில் குரல் கட்டளை பிறப்பித்தால் பல பணிகளை செயல்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. 7 பேர் அமர்ந்து செல்லும் இந்த காரில் தேவைப்பட்டால் கூடுதல் சொகுசு சீட்டுடன் 5 அல்லது 6 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.12.89 லட்சமாகும்.
‘ஹெக்டர் பிளஸ் 2021′ சொகுசு காரில் வானிலை முன்னறிவிப்பு வசதிகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், காற்றோட்டமான சீட்கள், எதிரில் பிரகாசமான விளக்குகள் கொண்ட வாகனம் வந்தால், இதன் முன் விளக்கு தானாக தனது பிரகாச வெளிச்சத்தை ‘டிம்’ செய்து குறைக்கும் வசதியை கொண்டுள்ளது என்று பிரசிடெண்ட் ராஜீவ் சாபா தெரிவித்தார். இந்தக் காரில் ‘ஐ ஸ்மார்ட் ‘ தொழில்நுட்பத்தில் குரல் வழி கண்ட்ரோல் வசதி உள்ளது. ஏசி துவக்கவும், எப்எம் துவக்கவும், மேற்கூரை திறக்கவும் என ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டளையிட்டால் உடன் செயல்படுத்தப்படும். வானிலை அறிவிப்பு, பாடல்கள் ஒளிபரப்பு போன்ற உத்தரவுகளை செல்போன் செயலி மூலம் செயல்படுத்தலாம்.
இதன் எம்ஜி ஷீல்டு திட்டத்தில் 5 ஆண்டு உத்தரவாதம், சாலையில் நின்றால் உடன் உதவிக்கு, இலவச சர்வீஸ் வசதிகள் உண்டு என்றார்.