செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை, மார்ச் 6–

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமான பேர் நேற்று மாலை சென்னையில் அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று மாலை (5–ந் தேதி), ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்களான லத்தூர் ஒன்றியம் செய்யூர் சம்பத், சித்தாமூர் ஒன்றியம் தமிழ் பிரபாகரன், மதுராந்தகம் ஒன்றியம் டி. ரவிக்குமார், உத்திரமேரூர் ஒருங்கிணைப்பாளர் என்.பி. தினகரன், உத்திரமேரூர் ஒன்றியச் செயலாளர் ஏ. அன்பழகன், திருப்போரூர் ஒன்றியம் டி.கஜேந்திரன்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஆனந்தன், குன்றத்தூர் ஒன்றியம் ஆர். செந்தில்குமார், பரங்கிமலை ஒன்றியம் கே. செல்வம்; நகரச் செயலாளர்களான மதுராந்தகம் நகரம் எம்.பி.வெங்கட்குமார், மலைமலை நகர் எஸ். ரவிச்சந்திரன்;

மகளிர் நிர்வாகிகள்

காஞ்சிபுரம், – செங்கல்பட்டு ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற மகளிர் நிர்வாகிகளான, பரங்கிமலை ஒன்றிய இணைச் செயலாளர் பி.ரேவதி, மறைமலைநகர் நகர இணைச் செயலாளர் லட்சுமி, குன்றத்தூர் பேரூராட்சி செயலாளர் ஜெயஸ்ரீ, குன்றத்தூர் பேரூராட்சி இணைச்செயலாளர் எஸ்.ஜோதி, இளைஞர் அணிச் செயலாளர்களான திருப்போரூர் ஒன்றியம் எம்.குருகிருஷ்ணன், சித்தாமூர் ஒன்றியம் பெ. நெப்போலியன்,

இலத்தூர் ஒன்றியம் வஜ்ஜிரவேல்; ஒன்றிய துணைச் செயலாளர்களான இலத்தூர் ஒன்றியம் கே.சதாசிவம், சித்தாமூர் ஒன்றியம் அண்ணா மணிகண்டன், கா.ஏழுமலை, பரங்கிமலை ஒன்றியம் ரமேஷ்குமார், உத்திரமேரூர் ஒன்றியம் எம்.ஏழுமலை, கோபிநாத், மதுராந்தகம் ஒன்றியம் ஜான், சங்கர்; நகர துணைச் செயலாளர்களான மறைமலைநகர் நகர துணைச் செயலாளர் ஜி. நாகப்பன், எஸ்.மகேந்திரன், சி.ராஜேந்திரன், மகேந்திரன், ஆதாம்கான் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

அப்போது, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, எம்.பி, துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம், எம்.பி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.தங்கமணி, அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பா. பென்ஜமின், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், அமைச்சருமான மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *