சிறுகதை

மீண்டது புன்னகை | மு.வெ.சம்பத்

Spread the love

வயலூர் கிராமத்தில் பொன்னுசாமி, பொன்னாத்தாள் தம்பதிகள் பெரிய பண்ணையாராகவே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் . இருவரையும் நல்ல முறையில் மேற்படிப்பு வரை படிக்க வைத்தனர்.

மூத்த மகன் பூமிநாதன். திருமணமாகி இவர்களுடன் இணைந்து விவசாயம் , வீட்டுப் பொறுப்பைக் கவனித்து வருகிறான். இளையவன் மழைவேந்தன் அரசாங்க பணியில் உயர் பதவி வகிக்கின்றான்.

இளையவனுக்கு திருமண வைபவம் அரங்கேற்றி மருமகள் மலையரசியுடன் வீட்டிற்கு பெரும் திரளாக சுற்றம் சூழலுடன் வந்தனர். மலையரசி புகுந்த வீட்டைப் பார்த்ததும் பெரிய பிரமிப்புடன் இவ்வளவு பெரிய வீடா என மனதுக்குள் கூறிக் கொண்டு புன்னகையுடன் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.

நாட்கள் உருண்டோட தனது கணவருடன் சென்னையில் அரசாங்க பங்களாவில் குடியிருப்பதாலும் அடிக்கடி வயலூர் வந்து செல்வதாலும் மலையரசிக்கு வாழ்க்கை மகிழ்வாகவே சென்றது.

அடுத்து வந்த சில மாதங்களில் பொன்னுசாமி, பொன்னாத்தாள் இருவரும் அடுத்தத்து இறந்து விட வீடே பொலிவிழந்தது .

இதற்குப்பிறகு மழை வேந்தன் கிராமத்திற்குச் செல்வதை புறக்கணித்து பழைய நினைவுகளிலேயே மூழ்கினான். அடிக்கடி சோர்வடைந்தான்.

வயலூரில் பூமிநாதனால் தாய், தந்தை செய்து வந்த காரியங்களைச் செவ்வனே செய்ய முடியவில்லை.

மலையரசி ஒரு முடிவுக்கு வந்தவளாய், பூமிநானைத் தொடர்பு கொண்டாள். தான் சில காரியங்களில் ஈடுபடப் போகதாகவும் அதற்குத் தங்கள் ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினாள். இந்த விஷயம் தனது கணவனுக்குத் தற்போது தெரிய வேண்டாமெனவும் கூறினாள்.

இதுவரை நடந்து வந்த தரும காரியங்கள் வரும் பொங்கல் திருநாளிலிருந்து தொடர வேண்டும்; இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் இலவசமாக செய்து வைக்க வேண்டும்; பள்ளிக் கூட மதில் சுவரைக் கட்டும் பணியைத் தொடரவேண்டும்; விவசாய நிலம் போக உள்ள மீதமுள்ள இடத்தில் பழம், மூலிகைச் செடிகள் வளர்க்கவேண்டும் என்பது போன்ற திட்டங்களை தங்கள் உதவியுடன் நடத்த விழைகிறேன் என்று கூறினாள்.

பூமிநாதனும் மலையரசியும் திட்டங்களை செயல்படுத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வந்த மழைவேந்தன் பூமிநாதன் கூறிய திட்ட வரைவுகளைக் கூறியதைக் கேட்டு ஆனந்தமடைந்தான்.

எப்படி இது சாத்தியமென கேட்டான் மழைவேந்தன்.

பூமிநாதன்,

‘‘இது மலையரசியின் விருப்பம் ’’எனக் கூறினான்.

மலையரசியைப் பார்த்து மன நிறைவோடு புன்னகைத்தான் பூமிநாதன். அப்பொழுது அங்கு வந்தாள் பூமிநாதனின் மனைவி பூவரசி.

அவளும் மலையரசியும் ஒரு சேர பூமிநாதனைப் பார்த்து,

‘‘அப்பாடா, நீங்கள் இவ்வளவு நாள் இழந்த புன்னகை மனம் இன்று மீண்டது’’ என சேர்ந்து கூறினார்கள்.

மழைவேந்தன் பூமிநாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *