தோலில் அரிப்பு என்பது மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் எவ்வளவு சொரிகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக அரிப்பு ஏற்படும். நாம் அரிப்பதைத் தொடர்ந்தால், அது தோலில் இடைவெளி ஏற்படுத்துவதுடன் பிறகு தொற்றுக்கும் வழி வகுக்கலாம்.
எளிதாக வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்கள், உங்கள் அரிப்பை ஆரம்பிக்கும் போது அதை குறைப்பதற்கான நல்ல மருந்து.
தேங்காய் எண்ணை
உலர் சருமத்தாலோ அல்லது பூச்சி கடியினாலோ, அரிப்பிற்கு என்ன காரணமாக இருந்தாலும் தேங்காய் எண்ணை தடவி அற்புதங்களைச் செய்ய முடியும்.
அதை உபயோகிக்க சிறந்த வழி, நேரடியாக அதை கைகளில் தேய்த்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசுவது தான். பரவலான அரிப்பு உணர்வை உடல் முழுவது உணர்ந்தால் குறிப்பாக குளிர் காலங்களில் ஒரு குளியல் தொட்டியில் மிதமான நீரில் ஊறி குளித்த பிறகு உடலை துவட்டி உலர்த்திய பின்னர் உடல் முழுவதும் தேங்காய் எண்ணை தடவவும். அதிகமாக அரி அரிக்கும் இடத்தில் சற்று அதிகமாக தேங்காய் எண்ணை தடவுங்கள்.
காலில் பித்தவெடிப்பு இருந்தாலும் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஒருசில நாட்களிலேயே பித்தவெடிப்பு மறைந்து மென்மையான தோல் வளர்ந்துவிடும்.
தேங்காய் எண்ணையின் அற்புத பலன்கள் பயன்படுத்தினால்த்தான் தெரியும். பயன்படுத்திப் பாருங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.