வாழ்வியல்

கறிவேப்பிலையில் உள்ள பல மருத்துவ குணங்கள்–3

Spread the love

இன்று செரிமானப் பிரச்சனையால் அவதிப்படும் பலருக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். செரிமான பிரச்சனை அதை தொடர்ந்து வயிறு மந்தமாக இருப்பது, பிறகு மலச்சிக்கல் என்று சிக்கல் மேல் சிக்கலாக அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டால் செரிமானம் தூண்டப்படும். பசியின்மை பிரச்சனை இருக்காது.

ஜீரண உறுப்புகள் துரிதமாக செயல்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கறிவேப்பிலையை அவ்வபோது கொடுத்து வந்தால், செரிமான பிரச்சனை இன்றி சுறு சுறுப்பாக வளைய வருவார்கள். மந்த தன்மை இல்லாததோடு ஆரோக்கியமாக வளர்வார்கள்.

அழகு குறிப்பிலும் கறிவேப்பிலை பயன்பாட்டுக்கு சிறப்பான இடம் சொல்லலாம். கூந்தல் பிரச்சனையான முடி உதிர்வு, இளநரை, வறட்சியான கூந்தல், அடர்த்தி குறைவு இப்படி இருக்கும் அத்தனையும் சேர்த்து தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு. கறிவேப்பிலை அப்படியே அரைத்து தலையில் தேய்த்து வந்தாலே முடிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைவாக கிடைத்துவிடும். சருமத்தில் தேமல், அரிப்பு, நமைச்சல் பிரச்சனை இருப்பவர்களும் கறிவேப்பிலையை அரைத்து பூசி வந்தால் சருமப் பிரச்சனைகளும் ஓடிவிடும்.

இவ்வளவு ஏன் உடல் எடையை குறைப்பதில் கூட கறிவேப்பிலை நன்றாகவே செயல்படுகிறது என்கிறார்கள் பயன்படுத்தி பலன் பெற்றவர்கள். இவ்வளவு குணங்கள் நிறைந்ததா கறிவேப்பிலை என்கிறீர்களா? ஆமாம் ஆனால் வெறும் உணவு பொருளில் இருக்கும் ஒன்றிரண்டு இலையை மட்டும் சாப்பிட்டால் போதுமா, இனி வாரம் ஒருமுறை கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி சாதம், கறிவேப்பிலை குழம்பு என்று சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *