வாழ்வியல்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயம்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளது வெந்தயம்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் தயாமின், ரிபோ பிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயத்திலுள்ள எண்ணைப் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.

மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.

வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும் அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது. வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது.

விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *