வாழ்வியல்

கரும்புச் சாறில் உள்ள மருத்துவ குணங்கள்!–3

Spread the love

கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகும்.

இது இனிப்பு என்றாலும், கரும்பு சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதால், நம் எடையை நிர்வகிக்க உதவும் வகையில் இருக்கிறது. அத்துடன், சிலருக்கு பற்கள் வலிமை இழந்து காணப்படும். பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்பு சாப்பிடுவதால், பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது.

உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது. இதயம் இதயம் தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்த கரும்பு சாறு அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.

கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். உடல் எரிச்சல் உடல் எரிச்சல் உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்கு கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் மூளை நிர்வகிக்கிறது. இந்த கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக, மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

குழந்தைகளுக்கு அடிக்கடி விளையாடும் போது கீழே விழுவதன் காரணமாக புண்கள் உண்டாகும். இதற்கு கரும்பை நசுக்கி, புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.

ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் முகப்பருக்கள் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. இது அழகையே கெடுப்பதாகவும் உள்ளது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *