செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்திலும் மதிய சத்துணவு திட்டம்: ரூ.1,954 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.23

கொரோனா ஊரடங்கு காலத்திலும் மதிய சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,954 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:

கைத்தறி மற்றும் துணிநூல் துறையானது, தமிழ்நாட்டில் அதிகமான வேலைவாய்ப்பு அளிக்கும் திறனைக் கொண்ட துறையாகும். ஏழை மக்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதன் காரணமாக, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில், 31.60 கோடி ரூபாய் மொத்தச் செலவில், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1.58 இலட்சம் நெசவாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. 2021 22ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,224.26 கோடி ரூபாய் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8163 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

2011 ஆம் ஆண்டு மே மாதத்தி லிருந்து,754 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து 11,454 திருக்கோயில்களில் 550.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 7,159 திருக்கோயில்களை புனரமைக்க 53.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கால பூஜை’ திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் 12,959 திருக்கோயில்கள் பயன் பெற்று வருகின்றன. இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் பொது நல நிதியிலிருந்து 1,409 திருக்கோயில்களின் புனரமைப்புப் பணிகளுக்காக 109.65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 1,234 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 8,163.26 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு, அவற்றின் பட்டாக்கள் அத்திருக்கோயில்களின் பெயரிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்குச் செல்வதற்கான மானியங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கு அடையாளமாகத் திகழ்ந்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ்,

2011 12 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் 12,50,705 பயனாளிகளுக்கு 1,791.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,099.08 கிலோ தங்கமும்,4,371.22 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 2011-12 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4,56,115 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.

2011 12 ஆம் ஆண்டிலிருந்து தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ்1,186 ஆண் குழந்தைகளுக்கும், 4,359 பெண் குழந்தைகளுக்கும் புதுவாழ்வு அளிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி, 24 ஆம் நாள் தற்போது மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் மதிய சத்துணவுத் திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 43,246 மதிய சத்துணவுக் கூடங்கள் வாயிலாக 40.09 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 2021 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு?செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 54,439 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6 மாதம் முதல் 6 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 33 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். வளர் இளம் பெண்களுக்கு அவர்களது ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க பல்வகை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

2 வயது முதல் 5 வயது வரை யிலான 11.33 இலட்சம் குழந்தைக ளுக்கு சூடான கலவை சாதம் வழங்கப்படுகிறது. 2021 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,634 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தி ற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *