சிறுகதை

மாற்று வழி | ராஜா செல்லமுத்து

கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன.

திரையரங்கிற்கு மாற்று வழி எதுவும் இல்லாமல் அதில் பணியமர்த்தப்பட்ட ஆட்கள் வேறு தொழிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

திரையரங்கில் வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் தர முடியாமல் திரையரங்குகள் அவர்களை வேலையை விட்டு நிற்கச் சொல்லும் அபாயமும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மூடப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையில் அதை நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்கள் அந்த வேலையை விட்டு விட்டு வெளியே வரவும் அவர்களால் அடுத்த வேலைக்கு செல்வது சிரமமாக இருக்கிறது.

வாழ்க்கை நடத்துவதும் அவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. திரையரங்கில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு அப்படி என்றால் சினிமா தொழிலை நம்பி இருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். நகரில் எவ்வளவு திரையரங்குகளில் வேலை செய்யும் நபர்களை மறு வார்த்தை சொல்லாமல் கூட வேலையை விட்டு நீக்கி இருக்கிறது.

திரையரங்க நிர்வாகம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி திரையரங்க முதலாளிகளோ சினிமாக்காரர்களோ யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் இதற்கு எதிர்மறையாக சிந்தித்தார் விமலா தியேட்டரின் உரிமையாளர் மகன்.

மற்ற திரையரங்கை போலவே அதில் பணி செய்யும் பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதென முடிவு செய்தார் திரையரங்க உரிமையாளர் கணேஷ். ஆனால் அதற்கு மாற்று வழியைச் சொன்னார் கணேஷின் மகன் கௌதம்.

அப்பா இந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி தான் ஆகனுமா? நீங்க வேலையை விட்டு போகச் சொன்னா அவங்களுடைய வாழ்க்கை என்ன ஆகுறது? அவங்க புள்ள குட்டிய எப்படி பிழைப்பாங்க. கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா? இது தப்பு. நாம வாழ்ந்திட முடியும். நம்மகிட்ட சொத்து இருக்கு. பணம் இருக்குது. ஆனா இதையே நம்பி இருக்கிற இந்த தொழிலாளர்கள் வாழ முடியாதப்பா. இதற்கு ஒரு மாற்று வழி பண்ணனும் என்று கௌதம் சொல்ல,

என்ன மாற்று வழி பண்ண சொல்ற.? இதுவரைக்கும் நாம ஆறு மாசத்துக்கு சம்பளம் கொடுத்தாச்சு. இனிமேலும் சம்பளம் கொடுக்க முடியாது. ஏன்னா சினிமா தியேட்டரும் ஓடல. வியாபாரமும் இல்ல. நம்ம கையில பணம் இல்ல… இப்ப வரைக்கும் நம்ம கையில இருந்த காசைப் போட்டு தான் அவங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கோம். இனிமேலும் சம்பளம் கொடுக்கணும்னா அது ரொம்ப கஷ்டம். சினிமா தியேட்டர திறக்கட்டும். அதுக்கப்புறம் அவங்கள வேலைக்கு கூப்பிடலாம் என்று கணேஷ் சொன்னார் .

சிறிது நேரம் யோசித்த கௌதம்

இல்லப்பா நான் ஒரு யோசனை சொல்றேன் என்றார் மகன் கௌதம் .

என்ன யோசனை ? என்ற அப்பா கணேஷ்

இல்லப்பா நம்ம சினிமா தியேட்டருக்கு முன்னாடி நிறைய இடம் இருக்குது . சினிமா தியேட்டருக்கு வர்றவங்க பார்க்கிங் பண்ணினா தான் பணம் வரும்.. இப்போ நாம சினிமா தியேட்டரும் ஓடல . பார்க்கிங் ஏரியா சும்மா தான் இருக்குது.

நம்ம தியேட்டர் சுத்தி நிறைய காம்ப்ளக்ஸ் இருக்குது . கடைகள் இருக்குது . காம்ப்ளக்ஸ் உள்ள போறவங்க, மணிக்கு இவ்வளவு பணம் கொடுத்துதான் வண்டிய அங்க நிறுத்த முடியும் அதனால வண்டியில வர்றவங்க வேற இடத்தில் வண்டியை நிப்பாட்டி, அதற்கு யோசிப்பாங்க இல்ல வண்டி எடுத்துட்டு வந்து விடுறாங்க. நம்ம ஏன் அந்த காம்ப்ளக்ஸ் போடுற தொகையிலிருந்து ரொம்ப கணிசமாக குறைத்து /நம்ம ஏரியாவுல வண்டியை பார்க்கிங் பண்ண வைக்க கூடாது? அப்படி பண்ணா சும்மா இருக்கிற நம்ம பார்க்கிங் ஏரியா பயன்படுத்துவது மாதிரி இருக்கும் ….வேலை இல்லாம இருக்கிற நம்ம தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது மாதிரியும் இருக்கும் என்ன சொல்றீங்க அப்பா ?என்று கௌதம் கேட்டார்.

மகனின் புத்திக்கூர்மையை பாராட்டிய கணேஷ் கௌதமை பசக் கென கட்டிப்பிடித்துக் கொண்டார்.

கௌதம் சொன்னது போலவே மறுநாள் அந்த பார்க்கிங் ஏரியா பொதுமக்களுக்கான பார்க்கிங்காக விடப்பட்டது .

காம்ப்ளக்ஸ் கடை, மருத்துவமனை என்று அந்தப் பகுதியில் வரும் ஆட்கள் எல்லாம் விமலா தியேட்டரில் வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு போனார்கள். அவர்கள் வேலை முடிந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு போனார்கள். இதனால் கணிசமான தொகையும் அந்த இடம் காலி இல்லை என்ற விவரமும் வந்தது .

வேலையில்லாமல் இருந்த தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைத்தது…. சும்மா இருந்த இடமும் பணம் சம்பாதித்துக் கொடுத்தது….. சிறிது நாட்கள் விமலா தியேட்டரின் ஏரியா பணம் கொட்டும் இடமாக மாறியது….. இதுவரை தங்களுடைய சொந்த பணத்தை கொடுத்த விமலா தியேட்டர் உரிமையாளர்கள்,

தன்மகன் கௌதமின் யோசனையால் அந்த இடம் இப்போது பணம் கொட்டும் தொழிலாக இடமாக மாறியது. மட்டுமில்லாமல் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு வேலையும் கொடுத்தது. அவர்களைக் காப்பாற்றியது. போலவும் இருந்தது. தன் மகன் கௌதமின் இந்த யோசனையை பிறரிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார் கணேஷ்…

சில விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையாத போது மாற்று வழியில் யோசனை செய்தால் சாதகமாக அமையும் என்பதை நினைத்து கணேஷ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *