வர்த்தகம்

தீபாவளி ஸ்பெஷல்: முகக் கவசத்தால் ஆடை வடிவமைத்த சென்னை திருநங்கை பிராசி

சென்னை, அக்.16

தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மருத்துவ மாஸ்க்குகளைக் கொண்டு மேலை நாட்டு ஆடையை சென்னையைச் சேர்ந்த திருநங்கை டிசைனர் பிராசி வடிவமைத்துள்ளார். இவர் கோயமுத்தூரை சொந்த ஊராகக் கொண்டவர். தற்போது டாட் டிசைனர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.

சென்னையில் மிஸ் இந்தியா போட்டி பங்கேற்பாளருக்கு ஆடை வடிவமைப்பில் பிராசி முதல் இடம் பிடித்து பாராட்டை பெற்றார். மூன்றாம் பாலின திருநங்கையாக இருந்தாலும், பல்வேறு திருநங்கைகளுக்கு டிசைனிங் பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஆன்லைனில் பயிற்சி அளிக்கிறார்.

பல்வேறு புதுமை டிசைன் ஆடைகளை வடிவமைத்து அதை புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்.

சுதந்திர தினத்தன்று ஜான்சி ராணி ஆடையை வடிவமைத்து, அவரே அணிந்து படங்களை வெளியிட்டார்.

தீபாவளிக்கு புதுமையான மாஸ்க் ஆடை புதிய வரவேற்பை பெறும் என்றார் அவர்.

சென்னை அம்பத்தூரில் டாட் டிசைன் கல்லூரி செயல்படுகிறது. www/dotsod.in வலைதளம் மற்றும் 9500012166 என்ற எண்ணில் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *