சிறுகதை

திருமண அழைப்பிதழ் | ராஜா செல்லமுத்து

வாஞ்சிநாதன் தன் மகனின் திருமணத்தை முன்னிட்டு பத்திரிக்கை அடித்து உற்றார் உறவினர் ஊரார்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

திருமண பத்திரிகையை வாங்கிப் படித்தவர்கள் இன்னும் வாஞ்சிநாதன் வீட்டில் திருமணத்திற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டனர். வாஞ்சிநாதன் மகன் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற தயாராக இருந்தது.

வாஞ்சிநாதன் வீட்டுல இன்னும் பொண்ணு மாப்பிள்ளை இருக்கும்னு நினைக்கிறேன் என்று ரவி சொல்ல அதற்கு சென்றாயன் எதிர்கேள்வி கேட்டார்

அதெப்படி வாஞ்சிநாதன் வீட்டுல பொண்ணு பையனும் இருக்குன்னு சொல்றீங்க? என்ற சென்றாயன் என் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் ரவி

திருமணப் பத்திரிக்கையில் போடுற பேரிலேயே ஒரு டிரிக்கு இருக்கு. அதான் தமிழ் மொழி பெருமை .தமிழ்மொழி அருமை வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு வசியம், ஒரு அர்த்தம், ஒரு புரிதல்– நமக்கு, தமிழ்மொழியில் இருக்கு. அதை யாரும் நாம புரிந்துகொள்வதில்லை. புரிஞ்சிக்க முயற்சி செய்ததும் இல்லை. நீங்க எவ்வளவு காலமா திருமண பத்திரிக்கை பாக்குறீங்க சென்றாயன் என்றார் ரவி

எனக்கு 60 வயசுக்கு மேல ஆகுது. நான் ரொம்ப வருஷமா கல்யாண பத்திரிக்கை பார்த்துட்டு தான் இருக்கிறன் ரவி. அதுல என்ன புதுசா இருக்குன்னு நீங்க சொல்றீங்க அந்தப் பத்திரிக்கையில் இருக்கிற எழுத்தை வைத்து எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். அதில் என்ன அப்படி, ஒரு சங்கேத மொழி இருக்கு என்று சென்ராயன் கேட்டார்.

அதுதாங்க நம்ம தமிழ் மொழி அருமை. நீங்க சரியா புரிஞ்சுகிறல. நம்ம தமிழ் மொழியில் ஆயிரம் அர்த்தம் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். உதாரணமா அ அப்படிங்கிற ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். கா அப்படிங்கிற வார்த்தைக்கு ஆயிரம் இருக்கு. நாமதான் ஒரு அர்த்தத்தில் நின்னர்றம் . அதுக்கு மேல ஆராய்ச்சி பண்றது இல்ல தமிழ் மொழியில் இருக்கிற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிறைய அர்த்தங்கள் இருக்கு அதுதான் தமிழ். நமக்கு முன்னால வாழ்ந்த முன்னோடிகள் அவங்க வெறும் சாதாரணமாக அதை எழுதி வைத்து விட்டுப் போகவில்லை. இது ஒரு உலகப் பொது மொழின்னு சொன்னாக் கூட தப்பில்லை. தமிழ்மொழி அப்படி ஒரு பொருள்கள் பொதிந்த மொழி தமிழ் என்று ரவி சொன்னான்.

என்னப்பா தமிழ் மொழி கூட பெருமையை தான் சொல்றியே ஒழிய பத்திரிக்கையில என்ன எழுதி இருக்குன்னு சொல்லலையே என்று சென்றாயன் துருவிக் கேட்டார்

சொல்றேன் பாருங்க. வாஞ்சிநாதன் குடுத்துட்டு போன பத்திரிகை இருக்குதா? என்று ரவி கேட்க

ஆமா இருக்கு என்று சென்றாயன் சொன்னார்

அதை பத்திரிகை எடுத்துட்டு வாங்க என்றான்.

ஓடிப்போய் அந்த பத்திரிக்கையை எடுத்து வந்தார் சென்றாயன்.

அந்தப் பத்திரிக்கையை படித்த ரவி

சென்றாயா மணமகன் பேருக்கு மேல திருவளர் செல்வன் அப்படின்னும் மணமகள் பெயருக்கு மேல திருவளர்ச்செல்வின்னு அவங்க மணமக்கள் பெயர் அடிச்சா இன்னும் எங்க வீட்டில திருமணத்துக்கு தயாராக மாப்பிள்ளை, பெண் இருக்காங்கன்னு அர்த்தம். அதுதான் திருவளர்ச் செல்வன் திருவளர்ச்செல்வி என்று ரவி சொன்னபோது

அது எப்படிங்க இவ்வளவு கரெக்டா சொல்றீங்க என்று சென்ராயன் முனைப்போடு கேட்டார்

அப்படி கேளுங்க, அதாவது மணமகன் பேருக்கு மேல திருநிறைச்செல்வன் அப்படின்னு, மணமகள் பேருக்கு மேல திருநிறைச்செல்வி அப்படின்னு போட்டிருந்தா இதுக்கு மேல எங்க வீட்டில பெண்ணும் ஆணும் இல்லை என்று அர்த்தம். அதுதான் திருநிறைச் செல்வன் திருநிறைச் செல்விக்கு அர்த்தம் வாஞ்சிநாதன் கொடுத்துட்டு போன பத்திரிக்கையில் திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வின்னு தான் அடிச்சிருக்கு. அதனால ரெண்டு பேர் வீட்லயும் இன்னும் கல்யாணத்துக்கு தயாரா ஆட்கள் இருக்காங்கன்னு அர்த்தம் என்று ரவி சொன்னபோது

தமிழ் மொழியின் பொதிந்திருந்த அர்த்தத்தை அறிந்து கொண்ட சென்றாயன்

என்னப்பா இப்படி சொல்றா? யாரும் சொல்லாமலே சங்கேத மொழியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நீ சொல்றது கரெக்டு தான் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர்கள் வெளியூர்க்காரர்கள் அறிமுகமில்லாதவர்கள் நண்பர்கள் பத்திரிக்கை கொடுக்கும்போது, அந்தப் பத்திரிகையை படித்து பார்க்கிறவங்க திருவளர்ச்செல்வன் திருவளர்ச்செல்வி அப்படின்னு இருந்தா, எங்க வீட்டுல பொண்ணு இருக்குன்னு அர்த்தம் கேட்டு வரலாம். அப்படின்னு சங்கேத மொழியில் சொல்றாங்க. என்னப்பா, என்ன மொழி இது. என்ன அர்த்தம் கேட்டாலே பிரமிப்பா இருக்கு. தமிழ் மொழியை உயர் தனிச்செம்மொழி என்று சொல்வது தப்பே இல்லை என்ற சென்றாயன், ரவி சொன்னதை கேட்டு மிரண்டு போய் நின்றான்.

அப்படின்னா கல்யாணத்துக்கு போகும்போது மாப்பிள்ளை வீட்டிலேயும் பொண்ணு வீட்டிலேயும் ஏதாவது திருமணத்துக்கு ஆள் இருக்காங்கன்னு கேட்கலாமா என்றான் சென்றாயன் .

அதுதான் உங்களுக்கு திருவளர்ச்செல்வன் திருவளர்ச்செல்வி என்று போட்டு அறிவித்திருக்காங்கயே. கேட்கலாம் என்று ரவி சொன்னார்.

வாஞ்சிநாதன் வீட்டு திருமணத்திற்கு போவதைவிட அவர்கள் வீட்டில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் ஆர்வத்திலே அந்த முகூர்த்த நாளை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் ரவியும் சென்றாயனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *