செய்திகள்

மார்கழி விழா: பெண்களுக்குப் பரிசு

சென்னை, ஜன.14-

சென்னை சூளைமேடு திருவேங்கடபுரம் ஸ்ரீ பிரசன்ன வேங்கட சுவாமி கோவிலில் தனுர் மாத பிரத்யேக பூஜைகள் தினசரி சிறப்பாக நடைபெற்றன. ஸ்ரீமான் உ வே இல மாதவன் பட்டாச்சார்யாள், ஸ்ரீமான் சுந்தரராஜ சுவாமிகள் முன்னிலையில் வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விழாக்களும் இவற்றில் இடம் பெற்றிருந்தன.

பக்தர்கள், தன்னார்வ தொண்டர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தினசரி சிற்றஞ்சிறுகாலே வந்து மார்கழி மாதத் திருவிழாவினை சிறப்பித்தனர். நிறைவு விழாவின் சிறப்பம்சம் என்னவென்றால் திருப்பாவைத் திருவிழாவின் அனைத்து நாட்களிலும் தவறாமல் கலந்து கொண்டும் இறைபணிகள் மேற்கொண்ட அனைவரையும் விழா நிர்வாகம் சிறப்பித்தது.

ஸ்ரீமான் கிருஷ்ணாபுரம் ஆர். கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் மாதங்களில் “மகத்துவமிகு மார்கழி” தலைப்பில் அனைத்து நாட்களிலும் திருப்பாவை – திருவெம்பாவை – திருப்பள்ளி எழுச்சி குறித்த விரிவுரை ஆற்றினார். வெங்கட் ரமணி நன்றி தெரிவித்தார். மார்கழி (தனுர்) மாத விழாவில் பங்கேற்ற பெண்களுக்குப் பரிசு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *