செய்திகள்

காமாட்சியம்மன் கோவிலில் மார்கழி இசைத்திருவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Spread the love

காஞ்சீபுரம் ,ஜன.16-

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கான மார்கழி இசைத்திருவிழாவில்- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கான மார்கழி இசைத்திருவிழா பாவை விழா 2020- காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் உதவி ஆணையர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் 9 பள்ளிகளை சேர்ந்த 192 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூ.3000, 2-வது பரிசாக ரூ.2000, 3-ம் பரிசாக ரூ.1000 வீதம் 36 மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணொடு பாடும் போட்டி, கட்டுரை போட்டி, 1 முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 8ம் வகுப்பு வரை, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இவர்களில் முதல் பரிசு பெற்றவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *