செய்திகள்

ஓஎல்எக்சில் கார் விற்பதாக கூறி பண மோசடி: கோவை வாலிபர் கைது

சென்னை, பிப். 2–

ஓஎல்எக்சில் கார் விற்பதாக கூறி இணையதளத்தில் பண மோசடி செய்த கோவை வாலிபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அரும்பாக்கம், ஜெய் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 52). இவர் பழைய கார் வாங்குவதற்காக இணையதளத்தில் அது தொடர்பாக கார்களை தேடி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதியன்று ஓஎல்எக்சில் விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அதில் வேகனார் கார் ஒன்று விலைக்கு உள்ளதாக தீபக் என்பவர் தனது செல்போன் எண்ணுடன் அதில் விளம்பரம் செய்திருந்தார்.

அவரது எண்ணில் ராஜன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தீபக் தனது எச்டிஎப்சி வங்கி மயிலாப்பூர் கிளை கணக்கில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தும்படி கூறியுள்ளார். அதனை நம்பிய ராஜன் தனது கூகுள் பே அக்கவுண்டு மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பின்னர் தீபக்கின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜன் அது தொடர்பாக சிஎம்பிடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டது கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மரப்பேட்டையைச் சேர்ந்த நரேஷ் (வயது 24) என்பவரை கைது செய்தனர். நரேஷ் இதே போல பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நரேஷை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *