சிறுகதை

மாமியார் வீடு | திருச்சிற்றம்பலம் சுரேஷ்

Spread the love

‘‘என்னங்க… நமக்கு எத்தனை பசங்க?

’’ இது என்ன கேள்வி .பத்து மாதம் சுமந்து பெற்றவள் நீ . உனக்குத் தெரியாதா?’’

‘‘எனக்கு தெரியும்.நீங்க சொல்லுங்க?’’

இரண்டு பெண்.ஒரு ஆண்.!

‘‘ஒருபெண்..ஒரு ஆண் நம்ம பேச்சைக் கேட்டு திருமணம் செய்துக்கொண்டார்கள். ஒரு பெண் மட்டும் நம்ம பேச்சைக் கேட்காம.. காதல் திருமணம் செய்து கொண்டு எங்கே..வாழ்கிறதுனு தெரியில.. இன்று வரை….’’

நம்ம பேச்சை கேட்டு திருமணம் செய்துக்கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள். நாம எப்படி வாழ்கிறோம்.. ஏதாவது உங்களுக்கு தெரியுமா?

குழந்தை பெற்றவள் நீ. நீயே சொல்லு.

நீங்க சொல்ல மாட்டிங்களா?

நீ ஏதோ சொல்ல வருகிறாய் என்பது மட்டும் புரிகிறது. எல்லாவற்றையும் நீ சொல் கேட்கிறேன்.

நம் பேச்சு கேட்டு திருமணம் செய்து கொண்ட பெண்.. தினமும் மாமியார் இடம் சண்டை போட்டு அடிக்கடி வீட்டுக்கு வருகிறாள்.நாமும் புத்திமதி கூறி அனுப்புகிறோம்.

மகன் நம்மோடு தான் வாழ்கிறான். எப்படி என்றால்…தனித்…தனி சமையலில். அதிலேயே..புரிகிறது. அவளுக்கு மாமியார்.. மாமனார் இருக்க கூடாது என்று.

நம்ம பேச்சை கேட்டு திருமணம் நடந்திருக்க கூடாதுனு சொல்ல வருகிறாயா?

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.திருமண வயதில் இருக்கும் பிள்ளைகள் பேச்சை பெற்றோரும் கேட்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை. அவர்கள் விருப்பப்படி அமைத்து கொள்வதில் தவறு அல்ல. எல்லா பிள்ளைகளும் பெற்றோரின் ஆசைப்படி தான் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.

பிள்ளைகள் காதலிப்பதாக கூறினால் பெற்றோரான..நாம் காதலிப்பவர்களை தனியே.. அழைத்து காதல் என்றால் என்ன.வாழ்க்கை என்றால் என்ன .பெற்றோரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ வேண்டும் என்பதை புரிய வைத்து.. காதலிப்பதாக. கூறுபவர்களை திருமணம் செய்து வைக்க முன் வரவேண்டும்.

பிள்ளைகள் காதலிப்பதாக கூறினால் உடனடியாக பெற்றோர் மறுப்பு தெரிவிக்காமல்… பிள்ளைகளின் காதலை புரிந்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அதை நாம..செய்யத் தவறிவிட்டோம்…நம் குழந்தை வாழ்க்கையில். அதனால் தான் நம் மகள் அவளுக்கு பிடித்த வரை திருமணம் செய்து வாழ்கிறாள்…நம்மையும் மீறி திருமணம் செய்துக்கொண்டு.

அவள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது.. மூன்று வருடங்கள் நேற்றோடு முடிந்து விட்டது.

அவ இப்ப எங்கே..வாழ்கிறாள்.. எத்தனை குழந்தை உள்ளது.போன்ற விபரம் எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. தெரிந்து கொள்ள எனக்கு ஆசை .தங்களுக்கு ஆசை இல்லையா?

என்ன ஆச்சு உனக்கு இன்று?

நம் குழந்தை போல்.. உள்ள ஒரு பெண்.காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து இருக்கிறாள் காதலன் உடன். அவளுக்கு திடீரென்று பெற்றோரை பார்க்க ஆசைப்பட்டு உள்ளாள்… மனதில். ஒரு கட்டத்தில்.. அந்த பெண்.. கடலில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளாள். அதை பார்த்த.. மக்கள்…அவளை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். காவல் துறை முழுவதையும் விசாரித்து.. அந்த பெண்ணின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்து பிரிந்த உறவை சேர்த்து வைத்துள்ளார்கள். இதை செய்தியில் கேட்ட பொழுது. ..நம் மகள் நாபகம் வந்தது.

நானும் அந்தச் செய்தியைப் பார்த்தேன். எனக்கும் …நம் மகள் ஞாபகம் வந்தது. இப்ப எங்கே போய் அவளை தேடுவது?

அவ மாமியார் வீடு எனக்கு தெரியும். அவங்க மூலமாக… அந்த ஊர் தெரு வாசிகள் மூலமோ.. நம்ம மகள் வாழும் வீட்டை கண்டு பிடித்து விடலாம்.பின் கூப்பிட்டு வரலாம்.

நல்ல ஜடியா.விடிந்ததும்…அவங்க ஊருக்கு போகலாம்.

இப்ப நிம்மதியாக தூங்கு.

இனி எனக்கு நல்ல தூக்கம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *