வர்த்தகம்

மேக்மா நிதி நிறுவன அறக்கட்டளை ஏழை மாணவருக்கு கல்வி உதவித்தொகை

சென்னை, ஜன.11

கொல்கத்தாவைச் சேர்ந்த ‘மாக்மா பின்கார்ப்’ நிறுவன அங்கமான மாக்மா அறக்கட்டளை ஏழை குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு “எம்-ஸ்காலர்” திட்டத்தில் உதவித் தொகை வழங்கி வருகிறது. இது 400 மாணவருக்கு உதவித் தொகை வழங்கியது என்று இதன் சமூக நலப் பிரிவு தலைவர் கவுசிக் சின்கா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆண்டுக்கு 1200 மொத்த விசாரணைகள் ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் – 825 ஆகும். விண்ணப்பித்த மாணவர்களின் மாத வருமானம் ரூ.3500 முதல் ரூ.6000 வரை இருந்தது. பெற்றோர் தினசரி கூலி, வேன் டிரைவர், கட்டிட பணியாளர், ஓவியர், பழுதுபார்க்கும் மெக்கானிக், மொபைல் பழுதுபார்க்கும் நபர், தையல்காரர், விவசாயி போன்றவர்கள் ஆவர்.

‘மாக்மா பின்கார்ப்’ நிறுவனத்தின் சமூக நலப் பிரிவு தலைவர் கவுசிக் சின்கா எங்கள் உதவி பெற்ற பழைய மாணவர் அனைவரும் சாதனையாளர், சிந்தனையாளர், கண்டுபிடிப்பாளராக உருமாறி வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *