செய்திகள்

சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.835

சென்னை, மார்ச் 1–

கியாஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்தது.

இதற்கிடையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை கடைசியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 1–ந்தேதி) சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *