வாழ்வியல்

இதய நோய் தீர்க்கும் தாமரை மலர் மருத்துவம்

தாமரை மலர் மருத்துவம் தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.

மூலிகைகளின் பலனை அறிய ஒரு சின்ன சுருக்கு வழி கூட இயிருக்கிறது . ஒரு மூலிகை வடிவில் மனித உறுப்பில் எது

இதை ஒத்து இருக்கிறதோ அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன் படும் என்று ஆயுர்வேத மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

அதேப்போல் மூடிய தாமரை இதயத்தை வலுவாக்கும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை. விட்டமின் சி பொட்டசியம் பாஸ்பராஸ் விட்டமின் B 6 தாமிர சத்து இவைகளுடன் மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.

தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய நோய்கள் கட்டுப்படும் .

தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப் பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும் .இவைகள் மிகக்கடினமாக இருக்கும் .இந்த விதைகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் . இதயம் பலப்படும் .சிறுநீரகங்களை வலுப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *