வர்த்தகம்

சுய தொழில் துவங்க மகளிர் மேம்பாட்டுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு

சுய தொழில் துவங்க மகளிர் மேம்பாட்டுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு

குறை தீர்ப்பு அமைப்புக்கு புகார் செய்ய தனிப் பிரிவு துவக்கம்

சென்னை, அக்.18

மகளிர் மேம்பாட்டுக்கு சுய தொழில் செய்ய அடமானம் இல்லாமல் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கி உதவுகிறது மத்திய அரசின் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு. இந்த கடனை டிஜிட்டல் முறையில் வழங்க இது நடவடிக்கை எடுத்து வருகிறது. மகளிர் இதன் சேவையில் குறை இருந்தால், புகார் செய்ய தனிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக மத்திய அரசின் மைக்ரோ பைனான்ஸ் தொழில்துறை குறைந்த வருமானம் மற்றும் குறைவான சேவைகளைப் பெற்ற பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அடையவும், சரியான நிதி முடிவுகளை எடுக்கவும் கடன் அளித்து உதவி வருகிறது.

கடந்த ஜூன் 30ந் தேதி நிலவரப்படி 5.80 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன், இப்போது வங்கிகள், சிறு நிதி வங்கிகள் அல்லது தனிப்பட்ட நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் மைக்ரோ பைனான்ஸ் பணியை சேவையாற்றப்படுகின்றன. இந்திய மைக்ரோ பைனான்ஸ் துறை கோவிட் -19 சூழலில் பெண்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் பணமதிப்பிழப்பின் போதும், இப்போது 2020 ஏற்பட்டுள்ள உலகளாவிய கொரோனா தொற்றுநோயின் போதும், நிதியியல் உள்ளடக்கலில், மைக்ரோ பைனான்ஸ் துறை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

மைக்ரோ பைனான்ஸ் கடன் என்பது பெண் கடனாளிகளுக்கான முறையான நிதியுதவி ஆகும், இது அடைமானங்கள் அற்றதாக இருப்பதோடு மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் முழுமையான ஒழுங்குமுறை மேற்பார்வைக்கும் உட்பட்டுள்ளது. இதில் வட்டியானது குறையும், இந்தத் துறை இப்போது ரொக்கமற்ற முறைக்கு மாற முயற்சித்து வருகிறது இதை அடைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவாக அமல்படுத்துகிறது. மைக்ரோ பைனான்ஸ் கடன்கள் குறுகிய கால கடன்களாகும்,

பெண் கடனாளிகளுக்கான ஒரு முக்கிய அம்சமாக வாடிக்கையாளர் குறை தீர்ப்பு செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர் அமைப்புகளில் கடன் வாங்கியுள்ள பல பெண் கடனாளிகள் தங்கள் குறைகளை அதன் கட்டணமில்லா எண் 1800 102 1080 ல் தெரிவிக்கலாம். மொழிகளில் செயல்படும்.மேலும் எந்த மாநிலத்திலிருந்தும், நாட்டின் எந்த இடத்திலிருந்தும் பெண் வாடிக்கையாளர்கள் வார நாட்களில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *