வர்த்தகம்

குறு, சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க கினரா கேபிடல் திட்டம்

சென்னை, பிப். 25–

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லா கடன் வழங்க கினரா கேப்பிடல் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியிடமிருந்து ரூ. 74 கோடி பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தால் பெறப்போகும் கடனுக்கான 100% உத்திரவாதத்தை அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் வழங்கியுள்ளது.

கடன் மற்றும் முதலீடாக ரூ. 100 கோடியை திரட்டும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியைப் பெற்றது, கினரா கேப்பிடல் என்று இதன் நிறுவனர் ஹர்திகா ஷா தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு என 100 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், கடனாகவும் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிதியை தற்போது திரட்டியுள்ளது. மேலும், கினரா கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக இருக்கும் கஜா கேப்பிடல் (Gaja Capital), கவா கேப்பிடல் (GAWA Capital), மைக்கேல் அண்ட் சூசன் டெல் பவுண்டேஷன் (Michael & Susan Dell Foundation) மற்றும் படாமர் கேப்பிடல் (Patamar Capital) உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கு முதலீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை கினரா கேப்பிடல், இந்தியாவில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர மூலதனம் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லா கடனாக வழங்க உள்ளது. கினரா கேப்பிடல் நிதி நிறுவனம், ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களை, முறைசார்ந்த நிறுவனக் கடன் வலைக்குள் கொண்டு வர ரூ. 2000 கோடி வரை, சிறு வணிகக் கடன்களை எந்தவித அடமானமும் பெறாமல் (collateral-free) வழங்கியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *