சினிமா

லிப்ட்

பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.

பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள்.

படத்தில் கேமராமேனாக எஸ். யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார்.

படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *