வாழ்வியல்

காய்கறி, கீரை வளர்க்க எல்ஜி நிறுவனப் பெட்டி!

Spread the love

காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டிகளை தயாரிக்கும் எல்.ஜி. நிறுவனம், 2020ல் ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது, காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்க உதவும் அலமாரி! வீட்டைச் சுற்றி காலி இடம், பால்கனி அல்லது மொட்டை மாடி இல்லாதவர்கள், வீட்டுக்குள்ளேயே, ஆண்டு முழுவதும் முக்கியமான காய்கறிகளை வளர்க்க, ‘எல்.ஜி. காலம் கார்டன்’ பெட்டியை தயாரிக்கவுள்ளது.

பார்க்க குளிர்பதனப் பெட்டி போலவே இருக்கும் இதில், சூரிய ஒளிக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகள், செடிகளுக்கு ஏற்ற தட்பவெப்பத்தை ஏற்படுத்தும் வசதி, வேர்களுக்கு தேவையான நீரை, தேவையான நேரத்தில் தரும் வசதி, உரம் செறிந்த தேங்காய் நார் படுகை போன்றவை இருக்கும்.

வீட்டுச் சமையலுக்கு தேவையான, 20 வகை கீரைகள் மற்றும் தாவரங்களை இதில் வளர்க்க முடியும் என்கிறது எல்.ஜி. நிறுவனம். ஈரத்தால் பூஞ்சை உண்டாகாமல் தடுக்கவும், தாவரங்கள் அழுகும் வாடை வராமல் தடுக்கவும் இதில் வசதிகள் உண்டு எனவும் எல்.ஜி., தெரிவித்துள்ளது. விரைவில் நம்மூர் கடைகளில், தவணை முறையில் கலம் கார்டன் பெட்டிகளை, எல்.ஜி. விற்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *