செய்திகள்

14 நாள் நடந்த கலந்தாய்வு கூட்டம்: எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க மகளிர் சுயஉதவிக் குழுவினர் உறுதி

ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதியில்

14 நாள் நடந்த கலந்தாய்வு கூட்டம்:

எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க மகளிர் சுயஉதவிக் குழுவினர் உறுதி

சென்னை ஜன.11

வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 14 நாட்களாக நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு கலந்தாய்வு கூட்டத்தில் பெண்கள் சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என மகளிர் உறுதி தெரிவித்தனர்.

தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று கடைசி கூட்டமாக நடைபெற்றதில் அனைவ ருக்கும் நலத்திட்ட உதவிகளை ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார்.

அப்போது மாவட்டள செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷிடம் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னாள் முதலமை‌ச்ச‌ர் அம்மா பெண்கள் தைரியத்துடன் வாழ பல நலத்திட்ட உதவிகளை உருவாக்கி தந்தார். ஆண்ட போதும் சரி தற்போது ஆளும் முதலமைச்சர் எடப்பாடியும் சரி பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் தனி அக்கறை காட்டி வருகிறார்.

ஆர்.கே.நகரில் கடந்த பல ஆண்டுக ளாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இல்லாத ஒரு மகத்துவத்துவத்தை இந்த கலந்தாய்வு கூட்டத்தின் மூலம் வடசென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பெண்களுக்கு ஒரு ஊக்கத்தையும் தன் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை அடையாளம் படுத்தும் விதமாக புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கல், சுய தொழில் புரிய நலத்திட்ட உதவிகள் வங்கி கடன் உதவி, அரசின் நலத்திட்டங்களை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகள், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ஸ்கூட்டி திட்டத்தின் மூலம் வங்கி கடன் வசதி பெற்று தர உறுதி ஏற்று தொடர்ந்து 14 நாட்களாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கலந்தாய்வு கூட்டம் மூலம் ஆலோசனைகளை வழங்கி சுமார் 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் முதல்வராக பொறு பேற்று பெண்கள் சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் உறுதி ஏற்றனர். கூட்ட இறுதியில் எண்ணற்ற உதவிகள் செய்த மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷுக்கு சால்வை அணிவித்து பூச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மீனவரணி மாவட்ட செயலாளர் பி.ஜெகன் வட்ட செயலாளர்கள் சந்தனசிவா, ஆர்.வி.அருண்பிரசாத், எம். ஹரிகிருஷ்ணன், மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *