செய்திகள்

பேட்டரியில் ஓடும் ‘ஆஸ்டிரிட் லைட்’ ஸ்கூட்டர்

Spread the love

சென்னை, செப். 12–

பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிப்பதால், ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் குறைந்த எடை, கவர்ச்சி தோற்றத்துடன் பேட்டரியில் ஓடும் ‘ஆஸ்டிரிட் லைட்’ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை ரூ.80 ஆயிரம் ஆகும். அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்ல ஏற்றது ஆகும். ஒரு தடவை சார்ஜ் செய்தால் 90 கி.மீட்டர் தூரம் போகும். தேவைப்பட்டால் மற்றொரு பேட்டரியை இணைத்தால், 180 கி.மீட்டர் தூரம் வரை போகும் என்று இதன் இணை நிறுவனர் அமித் ராஜ் சிங் தெரிவித்தார்.

இந்த ஆஸ்டிரிட் லைட் ஸ்கூட்டர் 3 மாடல்களில் கிடைக்கிறது. எடுப்பான 5 அழகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டர் மணிக்கு 75 கி.மீட்டர் வேகம் செல்லும்.  நகர்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்றது ஆகும். இது ஸ்போர்ட்ஸ்,  சிட்டி, எகானமி என 3 மாடல்களில் கிடைக்கிறது.

இதில் சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. 8.5 கிலோ கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி ஆகும். எளிதில் சார்ஜ் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *