செய்திகள்

10, 11, 12ம் வகுப்பில் தவறியவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு

Spread the love

சென்னை, அக்.1-

2018–19ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019–20ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மார்ச் 2020ம் பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க கோரிக்கைகள் வந்தன. எனவே மாணவர்களின் நலன் கருதி, பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இந்த 2 பருவங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்பின்னர் மார்ச் 2021 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களும், வருகை புரியாதவர்களும் புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு எழுத வேண்டும்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *