செய்திகள்

நிலஅளவையாளர் மைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Spread the love

சென்னை, நவ. 28–

தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் நிலஅளவையாளர் பிரிவு துவங்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆனநிலையில் 1973ம் ஆண்டு முதல் தற்போது வரை நில அளவையாளர் பிரிவில் பயின்றி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவரது ஆசிரியர்கள் இன்று அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் சந்தித்து தங்களின் ஆழ்ந்த நட்பு மற்றும் அன்பையும் பகிர்ந்து கொண்டனர். நில அளவையாளர் வகுப்பறையை நவீனமயமாக புதுப்பித்து புதிய இருக்கைகள் வரைபட பலகைகள் மற்றும் நவீன நில அளவை கருவிகள் வழங்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துரையாடிய முன்னாள் பயிற்றுனர்களான பொன்னம்பலம், வெங்கட்ராமன், சண்முகம் மற்றும் தற்போதைய பயிற்றுனர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

முடிவில் ஐடிஐயின் தற்போதைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் ரேணுகாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *