செய்திகள் வாழ்வியல்

கோவில்பட்டி கழுகுமலை முருகன் கோயில்

Spread the love

*அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய ஆலயம்

* முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் தலம்

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி -சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன் கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார்.

கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது. முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது. இக்கோயில் மூலவரான முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இம்முருகன் கோயில் அருகில் கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் உள்ளது.

ராமனால் கொல்லப்பட்ட ஜடாயு என்ற கழுகு அரசனுக்கு ராமபிரான் இறுதி காரியம் செய்ததாக வரலாறு. அவர் இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு இராமனை சந்தித்து தன் அண்ணனுக்கு காரியம் செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட பாவத்திற்கு அவரிடம் விமோசனம் கேட்டார். அப்போது அவர் நீங்கள் தெற்கிலுள்ள கஜமுக பர்வதமேக முகம் உடைய மலை சென்று தங்கி இருங்கள். உங்கள் பிரச்சினைக்கு நிச்சயமாக விடிவு கிடைக்கும் என்று கூறினார். அதுபோலவே அவர் அங்கு சென்று ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்து தவம் செய்தார் சம்பாதி–அங்கே சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் வந்தான்.

மலையில் இருந்த முனிவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அந்த சமயம் முருகப்பெருமான் அங்கு வந்து அவர்களுடைய கவலைகளை நீக்கி அந்த அசுரர்கள் இருவரையும் வதம் செய்தார். பின்னர் போர் செய்த களைப்பு தீர அந்த மலையிலேயே தங்கி இருக்க விரும்பினார். அவருக்கு சம்பாதி இடம் கொடுத்து வரவேற்றார். அத்துடன் சூரபத்மன் இருக்கும் இடத்தையும் காட்டிக்கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த முருகன் தங்கியிருந்த இந்த மலைக்கு தனது பெயரால் கழுகுமலை என்று பெயர் உண்டாயிற்று.

இங்கு முருகப் பெருமான் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். கழுகாசலமூர்த்தி என்ற பெயரில் இருக்கும் ஒரு முகமும் ஆறு கரங்களும் இருப்பது ஒரு அதிசயமான ஒரு அமைப்பாக இங்கு அமைந்துள்ளது. ஒருகரம் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறது என்றும் மற்ற கரங்களில் ஆயுதங்கள் உள்ளன என்றும் கூறப்படுகின்றன. சிவன், திருமால், பிரம்மா என்ற மும்மூர்த்திகளும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற அவர்களுடைய தேவியருடன் சூரனை வதைத்த முருகனுக்கு பக்கபலமாக இருந்தது தெரியப்படுத்தும் வகையில் இந்த ஆறு கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.

சூரனை அடிமைப்படுத்தி அவனது உடலின் ஒரு பகுதியை மயில் ஆக்கி முருகன் இங்கு அமர்ந்திருக்கிறார். இங்கு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் செவ்வாய்க்கு மங்கள காரகன் அதிபதி என்பதால் இந்தக் திருக்கோவிலை குருமங்கள தலம் என்று கூறுகின்றனர். வள்ளி தெய்வானைக்கு தனி தனி சன்னதிகள் உண்டு. முருகபெருமானின் வாகனமாக மயில், எல்லா தலங்களிலும் வலது புறம் திரும்பி இருக்கும். ஆனால் இங்கு இடது புறமாக திரும்பி உள்ளது. இதற்கு காரணமாக எங்கு இந்திரன் முருகனை காண மயில் வடிவில் வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு முக்கிய விழாக்களாக கந்த சஷ்டி மற்றும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு அன்றும் தைப்பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் திறந்துள்ளது.

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில் கழுகுமலை – 628 552, தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி எண்.04632– 251225, 251500, 9443980585.

முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *