செய்திகள்

ஆயதுல்லா அலி தலைமை ஏற்று ஈரான் அமைதிக்காக தொழுகை

Spread the love

தெக்ரான், ஜன. 17–

8 ஆண்டுகளில் முதன் முறையாக, ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமை ஏற்று நடத்தவுள்ளார்.

கடந்த வாரம் ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அந்நாட்டு மக்கள் பெருங்கோபத்துடன் இருப்பதால், இந்த தொழுகை நடத்தப்படுகிறது. மேலும் அமெரிக்கா விதித்த தடைகளால் ஈரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஈரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் செய்தி முகமையான மெர்ரில், தெக்ரானில் உள்ள மொசல்லா மசூதியில் 80 வயதான ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமை ஏற்று நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஈரான் தனது ஒற்றுமையையும் சிறப்பையும் மீண்டும் வெளிப்படுத்தும் நேரமிது என, ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் 33 வது ஆண்டுவிழாவின் போது, தெக்ரானில் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமை ஏற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *