செய்திகள்

அண்ணா தி.மு.க.விலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: நடிகர் கருணாஸ் பேட்டி

சென்னை, மார்ச் 6–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார்.

நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- முக்குலத்தோர் சமுதாயத்தை அண்ணா தி.மு.க. அரசு புறந்தள்ளிவிட்டது. முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அண்ணா தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *