சினிமா

‘‘அண்ணி ஜோதிகாகிட்டே கத்துக்க நெறைய இருக்கு; அவங்களோட நடிச்சது எனக்கு ஆசீர்வாதம்’: கார்த்தி பெருமிதம்

Spread the love

அண்ணி கூட நான் ஒரு படம் நடிப்பேன்னு நெனைக்கவே இல்லே

‘சிலம்பம் சுத்தி நடிக்கணும்னா 6 மாதம் பயிற்சி எடுக்கறாங்க’

சென்னை, டிச. 2

‘‘அண்ணி ஜோதிகாகிட்டே கத்துக்க நெறைய இருக்கு, அவங்களோட நடிச்சது எனக்கு பெரும் ஆசீர்வாதமாக நினைக்கிறேன்’’ என்று கார்த்தி பெருமிதத்தோடு கூறினார்.

‘தம்பி’ (வயாகாம் 18 ஸ்டூடியோஸ், பாரலல்இருந்து மைண்ட்ஸ் வழங்கும் படம்) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:

‘இந்தக்கதை உருவாக இரண்டு வருடம் ஆகிருக்கு. ஒரு ஐடியா கதையா மாறி, ஜீத்து ஜோசப் வந்தது, சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இத எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்த்ததுக்கு தயாரிப்பாளர் தீரஜ்ஜுக்கு நன்றி. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு முதல்ல பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, ஜாலியா இருந்தார். பாபநசம் படத்துக்கு அப்புறம் அவர் மேல இண்டலிஜண்ட் இயக்குநர்னு முத்திரை விழுந்திடுச்சு. அதுக்கேத்த மாதிரி அவரோட மெனக்கெடல் அபாரமா இருந்தது. காலை 6 மணிக்கு எந்திருச்சுடுவார்.

தினமும் டிஸ்கஸன் உட்காருவோம் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் கூட பேசற மாதிரி இருந்தது. அவ்வளவு நெருக்கமா இருந்தது. எல்லா இயக்குநரும் சேஃபிடிக்குனு சொல்லி ஒரே ஷாட்டா அஞ்சாறு தடவ எடுப்பாங்க. இவர் அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. சிலம்பம் ஸீன் இருந்தா 6 மாசம் கத்துக்கிறாங்க. ஒரு மாசம் முன்னாடி டயலாக் வாங்கி பிராக்டீஸ் பண்றாங்க. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.

அவங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு. அவங்களோட நடிச்சது ஆசிர்வாதம். ஒரு திரில்லர் படம் பண்றது டெக்னீஷியன்ஸ்க்கு தான் சுகம் ரிலேஷன்ஷிப் படம் பண்றது நடிகருக்கு சுகம்.அதில தான் அவங்க பெர்ஃபார்மன்ஸ் பண்ண முடியும். எனக்கு அக்கானா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல அண்ணா ரொம்ப டார்ச்சர் பண்ணுவார். அதுனால அக்கானா பிடிக்கும் அதுக்காகவே கடைக்குட்டி சிங்கம் பண்ணினேன். இந்தப்படத்தில ஒரு டயலாக் வரும் ஒரு வீட்ல அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்னு அருமையான டயலாக். இந்த டயலாக் தந்ததற்கு பாரதிதம்பிக்கு நன்றி. இந்தப்படத்த ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணேன்.

சத்யராஜ் மாமா இல்லாட்டி…

அதே மாதிரி சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இந்த சினிமா தொழில்ல திறமை தேவை இல்ல ஒழுக்கம் தேவைன்னு அப்பா சொல்வார். சினிமாவில் ஒழுக்கம் என்பதை சத்யாராஜ் மாமா கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. காலையிலயும் சாயங்காலமும் இப்பவும் ஒர்கவுட் பண்ணுவார். கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுலேயே ஆள் இல்லை. அவர் கூட பைக்ல சுத்துன சின்னப்பையன் நான் அவர்கூட நடிக்கிறதெல்லாம் மிகப்பெரிய ஆசிர்வாதம்.

சினிமாவை நேசிச்சு வேலை பாக்கறவங்க கம்மி…

அப்புறம் ஆர்டி சார் அவர் கேமரானு சொன்னப்பவே எனக்கு பயம் வந்துடுச்சு, அண்ணா மாதிரி எதிர்பார்ப்பாரேனு தோணுச்சு. இப்படி நடந்து வாங்கனு சொல்வார். சார் நான் அண்ணா கிடையாது. அவர் மாதிரி எதிர்பார்க்காதீங்கனு சொல்வேன். அவர்கிட்ட பிடிச்சது என் சமபளத்த கூட குறைச்சுக்குறேன் படம் ஹிட்டுன்னு சொல்லுங்கன்னு சொல்வார்.

சினிமாவா நேசிச்சு வேலை பாக்கிறவங்க ரொம்ப கம்மி. ஆனா அவர் எத்தனையோ படங்கள் பண்ணிட்டாலும் இன்னும் இளமையா புதுசா பண்ண துடிப்பவர். அவர் தான் எங்க ஜட்ஜ் அவர்கிட்ட நடிச்சு காட்டி ஓகே வாங்கிட்டா எங்களுக்கு சந்தோஷம். இளவரசு வேறொரு கலர்ல இருக்கார், ரமேஷ் திலக் அருமையா நடிக்கிறார். ரெண்டு பேரையும் நீங்க இந்தப்படத்தில ரசிப்பீங்க. ஜீத்து சாரோட திட்டமிடல் அவ்வளவு சரியா இருந்தது. ஒரு படத்த 60 நாள்ல முடிக்க முடியும்கிறதெல்லாம் நான் எதிர்பாக்கவே இல்ல. என்னோட முதல் படம் ரெண்டு வருசம், ரெண்டாவது படம் மூணு வருசம், ஒரு பெரிய படம் பெரிய நடிகர்கள் எல்லாத்தையும் சரியா பிளான் பண்ணி 65 நாள்ல இந்தப்படத்த முடிச்சாங்க. பூர்ணிமா என்ன வித்தியாசமா காட்ட ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க.

அப்புறம் கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் கிடைக்கிறது நடிகர்க்கு வரம். இந்தப்படம் உருவாக்கியிருக்கற விதம் கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் பிடிக்கும் சூரஜ்ஜுக்கு இது ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்குமே இந்தப்படம் ஸ்பெஷல்.

இவ்வாறு கார்த்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *