செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக மாநில அண்ணா தி.மு.க.வினர் நன்றி

கர்நாடக தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க எடியூரப்பாவுக்கு கடிதம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக மாநில அண்ணா தி.மு.க.வினர் நன்றி

பெங்களூர், அக். 10–

கர்நாடகாவில் தமிழ் பள்ளிகளுக்கு ஆசியர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. இணை செயலாளர் எஸ்.டி. குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. இணை செயலாளர் எஸ்.டி .குமார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநில தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாவும். தாய் தமிழகத்தின் ஆதரவு குரலாகவும், கர்நாடக தமிழ் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போதிய ஆசிரியர்கள் இன்றி தவிப்பதையும், அண்மையில் பல தமிழ் பள்ளிகள் கர்நாடகாவில் மூடப்பட்டு உள்ளதையும், மூடப்பட இருப்பதையும் தாயுள்ளத்துடன் அறிந்து, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், மூடப்பட்டுள்ள தமிழ் பள்ளிகளை திறக்க ஆவண செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் அனுப்பிய கடிதம் கர்நாடக தமிழர் நெஞ்சங்களில் தேன் போல் இனிக்கிறது.

உங்கள் தமிழ் உணர்வு பிற மாநில தமிழர்களுக்கு பெரும் ஆறுதலை தந்துள்ளது. தமிழகத்திற்கு அப்பால் உள்ள தமிழர்களை எம்.ஜி.ஆரம், ஜெயலலிதாவும் நேசித்ததை போல தொடரும் தங்கள் பண்பு போற்றுதலுக்குறியது. உங்களை மனதார வாழ்த்தி கோடானுகோடி நன்றியை, கர்நாடக மாநில தமிழர்கள், ஆசிரியர் பெருமக்கள், திருவள்ளுவர் சிலை குழுவினர், மற்றும் கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. இணை செயலாளர் எஸ் .டி .குமார் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *