வர்த்தகம்

கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிறுவனர் மகன் திருமணம்

சென்னை, பிப். 17

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிறுவனர் காவிரி மைந்தனின் மகன் இரா.விவேகானந்தன் மா. திவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அதன் துணைத் தலைவர் எம்.கே.மணி தலைமையில் அடையாறு சங்கீதா ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.சுமதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், கண்ணன் (ஏவிஎம்), மருத்துவர் பாஸ்கர், கவிஞர் கண்ணன் சேகர், சைதை எஸ்.மூர்த்தி மற்றும் கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மணமகன் பி.ஈ, எம்.எஸ். பட்டதாரி, கனடா வான்கூவரில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பொறுப்பில் இருப்பவர். தந்தையைப் போலவே கவிஞர், கட்டுரையாளர், கடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘காக்டைல்’ படத்தில் எல்லாப் பாடலையும் எழுதியிருந்தார். 350க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருப்பவர். யுடியூப் சானலில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. முன்னேறி வரும் இளம் பாடலாசிரியர்.

மணமகள், பி.ஈ., எம்.பி.ஏ. பட்டதாரி. காக்னிசன்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பொறுப்பில் இருப்பவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *