செய்திகள்

ரஜினி – கமல் தீடீர் சந்திப்பு

சென்னை, பிப். 20

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் திடீரென சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திடீரென சந்தித்தார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு ரீதியாக ரஜினியின் உடல்நிலை குறித்து கமல் கேட்டு தெரிந்து கொண்டதாக அக்கட்சியின் நிர்வாகி சினேகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஜினி கமல் சந்திப்பில் நிச்சயம் அரசியல் பேசப்பட்டிருக்கும் எனவும் சினேகன் தெரிவித்தார். 45 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் ரஜினியின் உடல்நிலை குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ரஜினியை சந்தித்து ஆதரவு கோருவேன் என கமல் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *