செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி

சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகேவுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 9–

வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகள், சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில் 3 கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் சி.கே. குமாரவேல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகள், சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *