செய்திகள்

காஞ்சீபுரம் டாக்டர் சத்தியநாராயணனுக்கு முதலமைச்சர் ‘கலைமாமணி விருது’ வழங்கி பாராட்டு

காஞ்சீபுரம், பிப். 27-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டிற்கான கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருது களை வழங்கி கௌரவித்தார்.

அந்த வகையில் 2019ம் ஆண்டிற் கான சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்பதற்கான கலைமாமணி விருது மற்றும் பொற்பதக்கத்தினை காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவர் டாக்டர் வெ.சத்திய நாராயணனுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கி அவரது சேவையை பாராட்டி கௌரவித்தார்.

கலைமாமணி விருது பெற்ற டாக்டர் வெ.சத்தியநாராயணன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் வெ.சத்தியநாராயணனுக்கு இந்த விருது கிடைத்தவுடன் மருத்துவர்களும், தொழிலதிபர்களும், நகர பிரமுகர்களும், அவரிடம் சிகிச் சைக்கு வந்து செல்பவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *