சினிமா

ஆம்புலன்சை வெச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்: ‘கைதி’ கார்த்தி அனுபவம்

Spread the love

* ஹீரோயின் இல்லாத படம்

* ஒரே இரவில் நடக்கும் கதை

* பகலில் எடுத்த காட்சியே இல்லை

* அதிரடி ஆக்ஷன், ரிஸ்க் ரிஸ்க் தான்

‘கடைசி நிமிடம் வரை எல்லோருக்கும் டென்ஷன்’:

டைரக்டர் கனகராஜ் லோகேஷ்

 

கைதி’ – ஹீரோயின் இல்லாத படம், ஒரே இரவில் நடக்கும் கதை, சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ள படம். பகலில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என பல சுவாரஸ்ய விஷயங்கள் படத்தில் நிரம்பியிருக்கிறது’ என்று அனுபவம் பேசிய நாயகன் கார்த்தி, ஆம்புலன்சை பக்கத்தில் நிறுத்தி வெச்சுக்கிட்டே ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் நடந்தது, புது அனுபவம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

கேள்வி: தீபாவளிக்கு கைதி வருது. எப்படி ஃபீல் பண்றீங்க ? என்று ஒரு கேள்வி.

‘‘எப்பவுமே பண்டிகை நாள்ல படம் ரிலீஸாகுறது சந்தோஷம் தான். அதுவும் தீபாவளி ரொம்ப ஸ்பெஷல். மொத்த டீமுக்குமே இது பெரிய சந்தோஷம். தீபாவளிக்கு படம் ரிலீஸ் கிடைக்கிறது ரொம்பவும் பெரிய விஷயம். ஏன்னா, தீபாளவளிக்கு பார்க்கிறது ஒரு மெமரியா மாறிடும். காலாகாலத்துக்கும் மறக்க முடியாததா அமைஞ்சிடும். போன தீபாவளிக்கு இந்தப் படம் பார்த்தேன்னு எப்பவும் சொல்லிட்டு இருப்பாங்க. அதுவும் கைதி எனக்கு ஸ்பெஷல். ஒரு சில படங்கள் நடிக்கும்போதே நமக்கு ஏதோ புதுசா பண்றோம்கிற உணர்வு இருக்கும். கைதி அது மாதிரி ஒரு பரிசோதனை முயற்சி’’. நல்லா வந்திருக்கு.

பரிசோதனை முயற்சி

கேள்வி: பரிசோதனை முயற்சி பண்ணனும்கிறது எல்லா நடிகருக்கும் உள்ள ஆசை. ஆனாலும் இது எப்படி படத்துல ஹீரோயினே வர மாட்டாங்களா ?

இல்ல, இதுல குழந்தை மட்டும் தான் இருக்கு. பரிசோதனை முயற்சின்னு நான் சொல்ல வந்தது. வித்தியாசமான சில விஷயங்கள் இருக்கறதலதான். மத்தபடி இது ஒரு ஜனரஞ்சகமான படம் தான். மக்கள் பார்த்து எஞ்ஜாய் பண்ற படம் தான். ஆடியன்ஸ் ரசிக்கற மாதிரிதான் இந்தப்படத்த உருவாக்கி இருக்கோம். இது அவங்களுக்கான படம். அப்படி ஒரு படத்தில இப்படி சில வித்தியாசமான விஷயங்கள் அமைஞ்சது எதிர்பார்ப்ப கூட்டியிருக்கு. இது அவார்டுக்காக எடுத்த படம் கிடையாது. ஆனா லவ் இல்லையா,காமெடி இல்லையானு கேட்கிறது இந்தப்படத்துக்கு ஒரு பப்ளிசிட்டியா மாறிடுச்சு. இந்தப்படத்துக்கு அதெல்லாம் தேவைப்படல, அவ்வளவு தான்.

‘முரட்டு சிங்கிள்’ படம்

கேள்வி: மீம்ல இது ஒரு ‘முரட்டு சிங்கிள்’க்கான படமும் சொல்லிட்டு இருக்காங்க, இதுல என்ன தான் கதை ?

இயக்குநர் அப்புறம் தயாரிப்பாளர் பிரபு முதல்லயே சொல்லியிருந்தாங்க, ஹாலிவுட்ல வர்ற speed, die hard மாதிரி படம் தான் இதுவும். அந்தப்படங்களோட அடிப்படையே ஆக்‌ஷன வச்சு தான் உருவாகியிருக்கும். அந்த மாதிரி ஒரு படம் தான் இது. என்ன சர்ப்ரைஸ்னா இதில அதுக்குள்ள பலரதரப்பட கேரக்டர்கள் இருக்கும். ஒரு இரவுல உச்சபட்ச சூழ்நிலைக்கு தள்ளப்படுற கேரக்டர்ஸ். எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். கைதி கேரக்டருக்கு ஒரு குழந்தை இருக்கும், ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும், அது எல்லாமே அழகா வந்திருக்கு. ஒரு ஆக்‌ஷன் படத்தில இந்த விஷயங்கள்லாம் இருக்கறத நான் முக்கியமா பாக்குறேன்.

பொறந்த கொழந்தைய பாக்காத அப்பன்

கேள்வி: அப்பாவுக்கு பொண்ணும் உள்ள உறவு படத்தில இருக்கு. உங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருக்கு. சிறுத்தை படத்தில ஏற்கனவே தகப்பனாக நடித்திருக்கிறீர்கள். இந்தப்படத்தில் அந்த அனுபவம் எப்படி இருந்தது ?

சிறுத்தை நிஜமில்லை. பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி நடிச்சது. இது புது அனுபவம். ஒருத்தன் குழந்தை பொறந்ததிலிருந்தே அவள பார்த்ததில்லங்கிறது சாபம் தானே. அந்த குழந்த எங்கேயோ இருக்கும் . அத நினைச்சு பாக்கவே கஷ்டமா இருந்தது. நமக்கு குழந்தை இருக்கு, அதனால அதோட ஆழத்த புரிஞ்சுகிட்டு நடிக்க முடிஞ்சது. இருந்தாலும். அதோட வலி ரொம்ப பெருசு. எழுத்திலேயே அது இருந்தது. அது தான் இந்தப்படத்தோட பலம்.

கேள்வி: நீங்க ஒவ்வொரு கேரக்டரும் பண்ணும் போது அந்தக் கேரக்டருக்குள்ள எப்படி போறீங்க ? அத எப்படி எடுத்து பண்றீங்க ?

முடிஞ்ச வரைக்கும் டைரக்டர் என்ன கொடுக்கிறார்னு பார்ப்பேன். ஒரு இயக்குநர் திரையில நம்மள காட்றது ஒரு விஷயம். நம்மள 30 வயசு ஆளா காட்டலாம். ஆனா 30 வயசு வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தான் அது ஒரு ஆக்டரோட கேள்வி. சில இயக்குநர்கள் அந்தக் கேள்விகளுக்கும் பதிலோட வருவாங்க. சில இயகுநர்கள் அது எனக்கு தேவையில்ல சார்னு சொல்லிடுவாங்க. அந்த நேரத்தில அத நம்ம தான் ரெடி பண்ணிக்கணும். ஒவ்வொரு படத்துக்கும் இத நான் ரெடி பண்ணிருக்கேன்.

உதாரணத்துக்கு காற்று வெளியிடை கேரக்டர். அந்தக் கேரக்டரே புரிஞ்சிக்க கஷ்டமான கேரக்டர். கண்டிப்பா அவனோட குழந்தை பருவம் நார்மலா இருந்திருக்காது. அப்புறம் மிலிட்டரி டிரெய்னிங் ரொம்பக் கஷ்டம் அத எல்லாம் தாண்டி வந்திருப்பான். அவனோட கஷ்டத்த காட்டிக்க மாட்டான். மணி சார் இதப்பத்தியெல்லாம் கொஞ்சம் சொன்னார். அப்புறம் நான் நிறைய தேடிப்போய் பார்த்தேன்.

தீரன எடுத்துகிட்டா அவன் ஒரு போலீஸ். நிறைய பேர சந்திச்சேன். அது மாதிரி சூழ்நிலையில அவங்க எப்படி நடந்துக்கிட்டாங்கனு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவங்க நிறைய குற்றங்கள பார்த்து பார்த்து சலிச்சு போயிருப்பாங்க.

10 வருடம் கைதி

அதே மாதிரி தான் கைதிக்கும். 10 வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வர்ற ஒருத்தன் எப்படி நடந்துப்பான் அவனுக்கு வெளில எதுவும் தெரியாது. அங்க அவன சுத்தி இருந்தவங்க யாரும் நார்மல் கிடையாது. அவங்களோட பழகிருப்பானா இல்ல பழகிருக்க மாட்டானா, வெறும் சுவர மட்டும் பார்த்துட்டு இருந்திருக்க முடியும். உள்ளே இருந்து வெளியே வற்ரவங்களுக்கு நாய பாத்தாக் கூட ஆசையா இருக்கும். அந்த உருவத்த பார்த்திருக்க மாட்டான்.

இதல்லாம் திரைக்கதைக்கு தேவையில்ல. ஆனா கேரக்டருக்கு தேவை இதல்லாம். எனக்கு பிடிச்சதால தேடி தேடி பண்றேன்.

கடைக்குட்டி சிங்கம் படத்துக்கெல்லாம் ஆராய்ச்சியே தேவையில்ல அது எங்க குடும்பம் தான். லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போன எப்படி இருக்குமோ அதுதான்.

கேள்வி: இந்த மாதிரி பண்ணும்போது அந்த கேரக்டர்லிருந்து வெளில வந்து அடுத்த படம் பண்ன கஷ்டமா இல்லையா ?

இப்ப பழகிடுச்சு. முன்னாடி ரொம்பக் கஷ்டமா இருக்கும். முதல் படம் ரெண்டு வருஷம், ரெண்டாவது படம் மூணு வருசம் இப்படி பண்ணும்போது வெளில வர்றது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா இப்ப பழகிடுச்சு.

முழுக்க நைட்ல ஷூட்டிங்: ரிஸ்க்

ஹீரோயின் இல்லங்கிற ஐடியாவ மட்டும் அப்படியே மாத்தாம வச்சுக்கிட்டீங்களா ?

அப்படி இல்ல. நாலு மணி நேரத்தில நடக்கிற கதையில எங்கங்க ஹீரோயின் வைக்கிறது. இப்ப தீரன் எடுத்துகிட்டா அதில காதல் வைக்கலாமா, வேணாம்னு பேசுறதுக்கு அந்தப்படத்தில் ஸ்பேஸ் இருந்துச்சு. ஆனா இதுல அது இல்லவே இல்ல அது தேவையும் படல.

கேள்வி: முழுக்க நைட்ல எடுத்தது எப்படி இருந்தது ?

ரொம்ப ரிஸ்க். தினமும் ஆக்‌ஷன் தான் அதிகாலை மூணு மணிக்கு உடம்பு தளர்ந்திடும் ஆனா அப்பத்தான் ஹெவி ஆக்‌ஷன் ஸீன் போய்க்கிட்டு இருக்கும்.

கஷ்டம்னு சொல்ல மாட்டேன். ஆனா ஈஸி கிடையாது.

விபத்தில் சிக்கினால் லைஃப்பே போகும்

கேள்வி: இந்தப்படமே முழுக்க ஆக்‌ஷன் தான் அதுக்கு எப்படி தயார் பண்ணிகிட்டீங்க ?

சேஃப்டி தான் ரொம்ப முக்கியம். யாருக்காவது அடிபட்டா மொத்தமா எல்லாரையும் பாதிக்கும். ஆனா ஆக்‌ஷன் பண்ணும்போது அந்த ரிஸ்க் இல்லாம பண்ண முடியாது. ஆனா அந்தக்காலத்த விட இப்ப ரிஸ்க் கொஞ்சம் கம்மினு சொல்லலாம். டெக்னாலஜி வளர்ந்தது ஒரு பெரிய ஹெல்ப். ஒரு ஆக்டருக்கு அடிப்பட்டுட்டா அவரோட கேரியர் என்னாகிறது. எம் ஜி ஆருக்கு நடந்திருக்கு. விஜயகாந்துக்கு நடந்திருக்கு. என்னுயிர் தோழன் படத்துல ஒருத்தர் லைஃபே காலியாயிடுச்சு. இதெல்லாம் தெரியும். அதனால பாதுகாப்பு முக்கியமா வச்சு தான் வேலை பார்த்தோம். எப்பவும் ஒரு ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கும். அடிபடாதது – எங்களுக்கு கிடைச்ச பிளஸ்ஸிங்னு தான் சொல்லணும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *