வாழ்வியல்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் காக்கும் சணல் பைகள்!

Spread the love

இன்று மத்திய – மாநில அரசுகள் பிளாஸ்டிக் பைகள், கனம் குறைந்த பேக்கிங் சீட்டுகள் போன்றவற்றை தடை செய்து, பறிமுதல் செய்து வருகின்றனர். எனவே அதற்கு மாற்றாக நான் ஓவன், வாழை நார் பைகள், சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை, மக்கள் தங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்துகின்றனர். முன்பு சணல் மூலம் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று சணல் நூல் தரமாக தயாரிக்கப்பட்டு, பல வண்ணங்களில் பேன்சி பொருட்கள், லேப்டாப் வைக்கும் பேக், பைல்கள், செல்போன் செல்போன் பவுச்கள், பெண்களின் பைகள் தயாரிக்கப்படுகின்றன.

இன்று சணல் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அரசும் மத்திய ஜவுளித் துறையின் சணல் வாரியமும், பயிற்சி, கடன், மார்க்கெட் செய்ய உதவிய அளிக்கின்றன. தையல் தெரிந்தவர்கள் 15 நாட்களிலும், தெரியாதவர்கள் 1 மாதத்திலும் இலகுவாய் தொழிலை கற்றுக்கொள்ள முடியும்.

35 வகைப் பொருட்களை தயாரிக்கலாம். சணல் துணி 3 வகையானது. உயர் தரம் மீட்டர் ரூ.100 முதல் ரூ.200 விற்கப்படுகிறது. அடுத்த ராகம் 75-100 ரூபாய் வரை விற்கிறது. 3 ஆம் தரம் ரூ.50-75 வரை கிடைக்கும். இப்பொருட்களை தரமாகவும், மழை பெய்தால் நனையாமல் இருக்கும் வகையிலும் நவீன முறையில் தயாரிக்கின்றனர்.

இப்பொருட்களை தயாரிப்போர் தாங்களே கடை வைத்து விற்கலாம். அல்லது பெரிய கடைகள், கண்காட்சிகள் மூலம் விற்கலாம். முன்பு சணல் பொருட்களை கொல்கத்தாவிலிருந்து வரவழைத்தனர். ஆனால் இன்று ஆந்திராவில் இருந்து கிடைக்கிறது. சென்னை, புதுச்சேரியில் மொத்த விலையில் சணல் துணிகள் மொத்த விலையில் கிடைக்கும். நூல், ஈரோடு, குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கும். மற்ற அனைத்துப் பொருட்களும் பெரிய ஊர்களில் கிடைக்கும்.

தொழில் நுணுக்கம்:

சாதாரண தையல் போல் தைக்க முடியாது. கலைநயம் தெரியவேண்டும். மின்சார தையல், மிஷினில் மட்டுமே தயாரிக்க முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் வேண்டும். உள்ளே நல்ல லைனிங் துணி பயன்படுத்த. தாம்பூலப் பையில் கைப்பிடியாக மஞ்சள் நிற காட்டன் ரோப், கல்லூரிகளில் பெல்ட், வைக்க வேண்டும். மழையில் பாதிக்காமல் இருக்க லேமினேசன் செய்த சணலை பயன்படுத்தலாம்.

முதலீடு:

இட அட்வான்ஸ் ரூ.10,000/–

பவர் தையல் மெஷின் – 1 ரூ.15,000/–

கட்டிங் டேபிள் – 1 ரூ.4,000/–

இதர கத்திரிக்கோல் போன்ற உபகரணங்கள் ரூ.6000/–

மொத்தம் 35,000/–

ஒரு சிறு அறை இருந்தால் போதுமானது. ரூ.20,000/– வரை நடைமுறை மூலதனம் தேவைப்படும்.

இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்:

சென்னையில் சிங்கர் மெரிட், மதுரையில் ராமா, வெளிநாட்டு பிராண்ட் இயந்திரங்கள் பெரிய ஊர்களில் கிடைக்கிறது.

மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:

சென்னையில் கிடைக்கும்.

பயிற்சி தரப்படும் இடங்கள்:

1) மதுரை சணல் குழுமம், 5, பெசன்ட் ரோடு,

சொக்கிகுளம், மதுரை – -2 போன்: 0452 4379401, 9715022811,

2) பி எஸ் ஜி கல்லூரி சனல் துறை, பீளமேடு, கோவை -4

பார்க்க வேண்டிய வலைதளங்கள்:

www.tapma.com, www.cipet.gov.in, www.india.gov.in/jute, www.plestindiafoundation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *